பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 92 பெரியபுராணம் - ஒர் ஆய்வு கும். எனவே அறிவு புகட்டல், சமயபோதனை என்ற இரண்டும் இலக்கியக் காப்பியத்தில் நுழைந்தாலும் இலைமறை காயாகவே அமைந்தன; முந்திரிக் கொட்டை போலத் துருத்திக்கொண் டிருக்கவில்லை. இலைமறை காயாக அறிவுபுகட்டல், சமயபோதனை என்பவற்றைச் செய்ய முற்பட்ட சிலம்பு, மக்களிடைப் பெருவாரி யான வரவேற்பை அன்றும் இன்றும் பெற்று விளங்கக் காண்கிறோம். இன்று நமக்குக் கிடைத்துள்ள முதற் காப்பிய மாகிய சிலம்பு தன்னேரில்லாத் தலைவனைப் பெற்று விளங்க வில்லை. தூது, போர், வெற்றி என்ற எதனையும் தன்னுள் கொண்டிருக்கவில்லை. இருசுடர்த் தோற்றம் மறைவு என்பவை கூடப் பாடப்புத்தகத்தில் கூறப்படுவதுபோலக் கூறப் பெற்றுள்ளனவே தவிரக் கற்பனை கலந்து பேசப்பெறவில்லை. 'நாற்பொருள் பயக்கும் நடைநெறித்தாகி காப்பியம் இலங்க வேண்டும் என்ற தண்டியின் கொள்கையையும் பின்பற்றவில்லை. என்றாலும் அதனைப் பண்டுதொட்டே காப்பியம் என்றுதான் நம் முன்னோர் கூறி வந்துள்ளனர். பிற்காலத் தண்டி கூறிய காப்பிய இலக்கணம் அதன்பால் இல்லையே தவிரத் தொடர் நிலைச் செய்யுளுக்குத் தொல்காப்பியனார் கூறும் அம்மை, அழகு தொன்மை, தோல் முதலாய இயல்புகள் அதில் இருக்கத்தான் செய்கின்றன. எனவே புதிய முறையில் அரசன், உடல்வீரம், போர் என்பவை இல்லாமல் ஒரு சாதாரணக் குடிமகனைத் தலைவனாக வைத்துக் காப்பியம் ஒன்றை ஆக்க முடியும் என்று துணிந்து அதனைச் செய்தும் காட்டிய இளங்கோவடிகள் தமிழ் இலக்கிய உலகில் புது வழி கண்டவராவார். மருதனார் செய்த புரட்சியைத் தொடர்ந்து அதனை விரிவாகச் செய்து இலக்கிய வளர்ச்சியில் இரண்டாவது திருப்பத்தை ஏற்படுத்தியவர் இளங்கோவடிகள் ஆவார். சிலம்பு, மேகலை இவை இரண்டினிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் நெடும் பாடலில் புதுவழி வகுத்த மாங்குடி மருதனை அடுத்துக் காப்பியத்தில் புதுவழி வகுத்தார் இளங்கோ. இந்த இருவரையும் பின்பற்றி இதுபோலச் செய்யப் பின்வந்த கவிஞர் கட்கு ஆற்றல் இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வீர Q59thuru-si (Heroic narrative poetry) floš Forlìgib தோன்றியவுடன் மறைந்துவிட்டது. எனவே மதுரைக் காஞ்சி யைப் போல அதனைப் பின்பற்றி வீர நெடும் பாடல் தோன்றாத