பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 39.3 தில் வியப்பு இல்லை. சிலப்பதிகாரம் போன்ற காப்பியம் ஏன் தோன்றவில்லை? என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. சிலம்பை அடுத்து ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர்த் தோன்றியிருக்க வேண்டும் மணிமேகலை. சிலம்பைப் போன்றே குடிமகளைத் தலைவியாகக் கொண்டு தோன்றியது தான் மணிமேகலைக் காப்பியம். தமிழ்நடை என்று மட்டும் எடுத்துக்கொண்டால் மணிமேகலை நடை சிலம்புடன் ஒப்ப வைத்து எண்ணத் தகுந்த சிறப்புடையதுதான் என்பதில் ஐயமில்லை. என்றாலும் என்ன? தமிழருள்ளத்தைச் சிலம்பு கவர்ந்ததுபோல் மணிமேகலை என்றுமே கவரவில்லை. இதன் காரணத்தைத் தேடி அதிகத் தூரம் செல்லவேண்டிய தேவை இல்லை. போதனை, புகட்டல் என்ற இரண்டையும் முந்திரிக் கொட்டைபோல் வெளியே தெரியுமாறு செய்ததே மணிமேகலை யின் சீர்குன்றலுக்குத் தலையாய காரணம். அடுத்துப் பிற சமயங்களைத் தேவையில்லாமல் வம்புக்கிழுத்து அவற்றைச் சாடமுற்பட்டது இரண்டாவது காரணம். அதுவரைச் சமயப் பொறையுடன் இருந்தது தமிழகம் என்பதில் ஐயமில்லை. சைனராகிய அடிகள் 'பிறவா யாக்கைப் பெரியோன் கோயில் ' என்றும், 'திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே ' என்றும் பாடுகிறார். இதன் எதிராக, வழியோடு செல்லும் சமணத்துறவி ஒருவ ரைக் குடிகாரன் ஒருவன் வம்புக்கிழுத்து, அவருடைய அஹிம்சைக் கொள்கையை எள்ளி நகையாடுவதாக, கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின் விளைபூந் தேறலில் மெய்த்தவத்திரே! உண்டு தெளிந்துஇவ் யோகத்து உறுபயன் கண்டால் எம்மையும் கையுதிர் கொண்ம்' என்ற முறையில் பாடிச் செல்கிறது மேகலை. அம்மட்டோ டில்லை! தமிழகத்தில் பெருவழக்காக இருந்த சமயங்கள் சைவம், வைணவம், சைனம் என்பவையேயாம். மிகமிகக் குறைவாக வும் அரசியல் செல்வாக்கு இல்லாமலும் இருந்தது .பெளத்த சமயம். எனவே மணிமேகலை வெளியானவுடன் அதனைப் படிப்பவர்கள் நூற்றுக்குத் தொண்ணுற்றெட்டுப்பேர் பெளத்தர்