பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 4 பெரியபுராணம்- ஓர் ஆய்வு அல்லாதவர். அவர்கள் அனைவருடைய சமயத்தையும் சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதை' என்ற 27 ஆவது காதையில் மணிமேகலை தாக்குகின்றது. மாபெருஞ் சமயங்களாகிய சைவம், வைணவம் என்பவற்றின் தத்துவங்களை மூன்று அல்லது நான்கு வரிகளிற் கூறி அடுத்து அவை பயனற்றவை, குறையுடை யவை என்று தாக்க முற்படுகின்றது. எனவே தமிழக இலக்கிய உலகில் சமயப் பொறைக்குச் சாவுமணி அடித்த பெருமை சாத்தனார் அவர்களையே சாரும். உலக இலக்கியங்களிலேயே சாதாரணக் குடிமகன் ஒருவனை வைத்துக் காப்பியஞ் செய்த பெருமை தமிழ் மொழிக்கே உண்டு. எனினும் பின்னர் வந்த சாத்தனார் செய்த செயலால் சிலப்பதிகாரம் போன்ற குடிமக்கள் காப்பியம் பிற்காலத்தே தோன்ற வழியில்லாமற் போய்விட்டது. சமயங் கள் பலவாகப் பல்கிவிட்ட காரணத்தால் சமயப் போராட்டங் கள் நிகழ்வதைத் தவிர்க்க இயலாமற் போய்விட்டது. இந்த நாட்டின் இலக்கிய நிலை மட்டும் இவ்வாறு உள்ளது என நினைய வேண்டா. மில்டன் போன்ற மாபெரும் கவிஞர்கள் 'அரியபச்சட்டிகா போன்ற தனி நூல்களில் கத்தோலிக்க மதத் தலைவரான போப்பாண்டவரை மிகவும் இழிவுபடுத்திப் பேசி யிருப்பது உண்மையாயினும், அவனுடைய சுவர்க்க நீக்கத்தில் இதற்கு இடங் கொடுக்கவில்லை. எனவே இன்று அவனுடைய சுவர்க்க நீக்கமும், சானட்டுகள் என்ற கவிதைகளும் பலராலும் விரும்பிப் படிக்கப்படுகின்றன. ஆனால் அவன் எழுதிய அரியபச் சட்டிகாவைச் சீந்துவார் இல்லை. சமயப் போராட்டத்தைப் பெரு நூலுள் நுழைத்தால் அந் நூல் மக்களிடைச் செல்வாக்குக் பெறுவது கடினம் என்பதற்கு மணிமேகலை நல்லதோர் எடுத்துக் காட்டாகும். திருஞானசம்பந்தர் புராணத்திலும், நாவரசர் புரணத்திலும் இதற்கு ஒரளவு இடம் கொடுத்தமையின் பெரியபுராணமும் அதற்குரிய இடத்தைத் தமிழகத்தில் பெற முடியாமற் போய்விட்டது. முன் பின்னாகத் தோன்றிய சிலம்பு, மேகலை என்ற காப்பியங்களையும் ஒன்றாகச் சேர்த்தே கூறும் பழக்கமும் நாட்டில் புகுந்துவிட்டது. பதிகம் என்ற பெயரில் பிற்காலத்தார் இவ்விரு புலவர்களும் சமகாலத்தவர் என்று தோன்றும்படிப் பாடிவைத்தனர். இதன் பயனாக இவை இரண்டையும் ஒரு காலத்தவை என்றே கருதித் தொல்காப்பிய உரையாசிரியர்கள், அடியார்க்கு நல்லார் போன்றவர்களும் பேசத் தொடங்கினர். மணிமேகலை மக்களால் அதிகம் போற்றப்படவில்லை என்பது உண்மை. சிலம்பு பெற்ற சிறப்பை இது பெறவில்லை என்றால் இதன் காரணம் யாதாக இருக்கும் என அற்றைநாளில் யாரும்