பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 3 95 சிந்திக்கவில்லை போலும்! அதன் எதிராகச் சாதாரண மக்களைத் தலைவர்களாக வைத்துக் காப்பியம் இயற்றினால் அதற்கு மக்களிடையே செல்வாக்கு இராது போலும் என்று புலவர்கள் தவறாகக் கருதத் தொடங்கிவிட்டனர். இந்த அச்சம் காரண மாகவே பெருங்கதை, சூளாமணி, சிந்தாமணி போன்ற காப்பி யங்கள் பழைய மரபு பற்றி அரசர் கதைகளையே மையமாகக் கொண்டு தோன்றலாயின. தவிர இப்புலவர்களும் பிறமொழியில் உள்ள பிறநாட்டுக் கதைகளையே எடுத்துக்கொண்டு காப்பியம் புனையத் தொடங்கினர். சிலம்பு வகுத்த புதுவழியில் பின்வந்தவர் யாரும் செல்லவில்லை இந்த வளர்ச்சியில் வருந்தத் தகுந்த நிலை என்னவென்றால் சிலப்பதிகார ஆசிரியர் வகுத்த புதுவழியில் யாரும் செல்லாமற் போய்விட்டமையே ஆகும். சாத்தனாரும் இளங்கோவின் துணுக்கத்தை அறிந்து மணிமேகலையை இயற்றியிருப்பின் உலக மொழிகளுள் காணப்படாத அளவு குடிமக்கள் காப்பியங்கள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்திருக்கும். மணிமேகலை, பெருங்கதைவரை வீறுநடை போட்ட ஆசிரியப்பாவும் 7 ஆம் நூற்றாண்டில் தேவார ஆசிரியர்கள் பயன்படுத்திய விருத்தப் பாவால் வெற்றி கொள்ளப்பெற்றது. இலக்கியக் காப்பியத் திற்கு ஆசிரியப்பாவைவிட விருத்தப்பாவே சிறந்தது என்பதைச் சிந்தாமணியும், கம்பராமாயணமும் விளக்கிவிட்டன. சூளாமணி யும், சிந்தாமணியும் ஏறத்தாழ ஒரே காலத்தவை; அதாவது 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என ஆய்வாளர் கருதுவர். என்றாலும் 9 ஆம் நூற்றாண்டு என்றும், 10ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்றும், 12ஆம் நூற்றாண்டு என்றும் கூறப்படுகிற கம்பன், காப்பிய உலகில் ஒப்பதும் மிக்கதும் இல்லாத ஒரு காப்பியம் படைத்தான். இலக்கியக் காப்பியத்துக்கு வேண்டப்படுவுன என்று கூறப்பெற்ற அனைத்துப் பண்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு காப்பியத்தைப் படைத்து உலவவிட்டவன் கம்பனாவான். அவனுக்கு முன்னர்த் தோன்றிய அத்துணை இலக்கியங்களையும் காப்பியங்களையும் பழுதறக் கற்றுத் தேர்ந் திருந்த கம்பன் ஒப்பற்ற இலக்கியக் காப்பியம் ஒன்றைப் படைத்த தில் வியப்படைய ஒன்றும் இல்லை. முன்னர் இலக்கியக் காப்பி யத்திற்குக் கூறப்பெற்ற அனைத்து இலக்கணங்களும் நிரம்ப அவன் தன் நூலை ஆக்கினான். அறிவு புகட்டலையும், சமயக் கொள்கையையும் அற்புதமான முறையில், வேற்றுச் சமயத் தார் படித்தாலும் மனம் புண்படாத வகையில் திறம்படத் தன் காப்பியத்தை அமைத்தான்.