பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 96 பெரியபுராணம் - ஒர் ஆய்வு அவனுக்கு முன்னர்த் தோன்றிய காப்பியங்கள் இந்த உலகில் பிறந்து, வாழ்ந்து, மடிந்த மன்னர்களைப் பற்றியே பாடின. னால் கம்பன் கடவுளை மனிதனாகப் படைத்து உலவவிட்டு அதில் வெற்றியுங் கண்டான். மேலே கூறிய காப்பியங்கள் அனைத்தும் தோன்றி வழக்கில் வந்தபிறகு தோன்றியவர் சேக்கிழார். எனவே அவர் காப்பியம் பாடவேண்டும் என்று நினைத்தபொழுது சிலம்பு முதல் கம்பன் வரை அனைத்துக் காப்பியங்களும் எதிர்நின்றன. அவற்றை யெல்லாம் கற்றுத் தேர்ந்த அவர், அந்தக் காப்பியங்கள் எதனுடைய அமைப்பும் தாம் பாட நினைத்த காப்பியத்துக்கு முன்னோடியாக அமையாது என்பதை எளிதிற் கண்டு கொண்டார். மணிமேகலை, சிந்தாமணி, சூளாமணி என்பவை சமயத்தை யும் அதன் கொள்கைகளையும் போதிக்கின்றன என்பது உண்மையாயினும் போதிக்கும் முறையில் மணிமேகலை ஏனைய இரண்டினின்றும் முற்றிலும் மாறுபட்டது. அன்றியும் ஆசிரியப்பா கி.பி. 4ஆம் நூற்றாண்டு வாக்கில் வழக்கொழிந்துவிட்டது. அதே நூற்றாண்டை அல்லது 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காரைக்கால் அம்மையார் தம் மூத்த திருப்பதிகத்திலும் அற்புதத் திருவந்தாதியிலும் முறையே விருத்தப்பாவையும், வெண்பாவை யும் பயன்படுத்தலாயினர். எனவே விருத்தப் பாவையும் வெண்பாவையும் முதன் முதலாகப் பரந்த அளவில் பயன்படுத்தி யவர் காரைக்கால் அம்மையாரே ஆவார். தமிழ்க் காப்பியங்கள் வடநாட்டுக் கதைகளை எடுத்தமை ஏன்? கி.பி 10ஆம் நூற்றாண்டிலும் அதற்குச் சில ஆண்டுகள் முன்னரும் தோன்றிய சிந்தாமணியும் சூளாமணியும் ஆசிரியத்தை ஒதுக்கிவிட்டு விருத்தப்பாவைக் கைக்கொண்டதில் புதுமை ஒன்று மில்லை. அவை அம்மையாரையும், தேவார, பிரபந்த ஆசிரியர் களையும் பின்பற்றின. ஆனால் வடநாட்டுக் கதையை இருவரும் தேர்ந்தெடுத்தனர். அதிலும் அரசன் கதையையே தேர்ந்தெடுத்தனர். சமய அடிப்படையில் தம் காப்பியத்தை அமைக்க முயன்றாலும் எந்த ஒரு சமணத் துறவியின் அல்லது தீர்த்தங்கரரின் வரலாற்றையோ ர்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். மணிமேகலை குடிமகள் ஒருத்தியைத் தலைவி