பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 பெரியபுராணம்- ஓர் ஆய்வு இவ்விரு காப்பியத் தலைவியரும் கணிகையரே சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரண்டு காப்பியங் களிலும் பெரும் பங்குபெறும் இருவரும் கணிகையர் குலத்தில் தோன்றியவர்களே என்பது சிந்தனைக்குரியது. கணிகையரை மணந்து அவர்களை மனைவியராகக் கொள்ளும் மரபு சங்க காலத்திலிருந்தே வருகின்ற ஒரு பழக்கம் என்று கூறலாம். காதல் பரத்தை, சேரிப் பரத்தை இற்பரத்தை என்றபிரிவுகள் தோன்றிய காரணமே கணிகையருள் ஒருசிலர் ஒருவனை மணந்து குடும்பப் பெண்களாக மாறிவிடும் பழக்கம் இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. 'தன் மனையகம் மறந்து மாதவி யுடன் தங்கிவிட்ட கோவலன் அவளுடன் குடும்பம் நடத்திய பாங்கையும், மகள் ஒருத்தியை அவள் மூலம் பெற்ற பாங்கையும் அறியமுடிகிறது. இங்ங்ணம் ஒருத்தியை மணந்து அவளுடைய வீட்டிலேயே தங்கிவிட்டாலும், சமுதாயம் அவளை அவனுடைய இல்லக் கிழத்தியாக ஏற்றுக் கொள்ளாமல், அதே நேரத்தில் அவள் பொது மகள் அல்லள் என்பதையும் ஒப்புக்கொண்டது எனக் கருதவேண்டியுள்ளது. இதனாலேயே குடும்பத் தலைவி, சேரிப்பரத்தை என்ற இரண்டு துருவங்களிடையே இற்பரத்தை என்ற ஒரு பகுதி தோன்றிற்று என்று கருதலாம். பெருங்கதையில் வரும் உதயணனின் மகனாகிய நரவாணதத்தன் மணந்து கொண்டதும் ஒரு கணிகையையே ஆகும். சங்க காலத்தில் மருதத்திணை என்ற ஒரு பெரும் பிரிவே கணிகையர் பற்றியதாக அமைந்தது. இந்தக் கணிகையர் சமுதாயம், பொதுமக்களால் ஒரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் போலும் கோவலன் மாதவியுடன் வாழ்ந்ததை யாரும் குறைகூற வில்லை. மனைவியையும், தாய் தந்தையரையும், ஒரேயடியாகக் கோவலன் மறந்துவிட்டு மாதவியுடன் தங்கிவிட்டதை மட்டும் குறையாகக் கூறினர். அவன் மாதவியுடன் இருந்தது அக்கால வழக்கம்தான் என்பதை அறிதல்வேண்டும். என்றாலும் இத்தகைய வாழ்க்கையில் குறை நேரும்பொழுது அது தனிப் பட்டவர் குறையாகக் கருதப்படாமல் கணிகையர் குறையாகவே கூறப் பெற்றது. கணிகை என்று அறிந்திருந்தும், பல்லாண்டுகள் அவளுடன் வாழ்ந்து ஒரு பெண்ணையும் பெற்று அவளுக்குப் பெயர் சூட்டுவிழாவும் செய்து முடித்தபின்னர்த் திடீரென்று ஒரு நாள், 'கானல்வரி யான் பாடத் தான் ஒன்றின்மேல் மனம் வைத்து, மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள் ’’