பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 O Ú பெரியபுராணம்- ஓர் ஆய்வு அபலை என்ற பெயருக்கு ஏற்ப அழுது மடியவில்லை. ஒவ்வொரு சோதனையையும் அவளால் எப்படி எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ள முடிந்தது? வாழ்க்கையில் அவள் கொண்ட குறிக்கோளே அவளை இந்த நிலைக்கு உயர்த்திற்று. காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு வெளிப்பட்டறியாத ஒருத்தி, ஒரு காவதம் கடந்தவுடன் 'மதுரைமுதுர் யாது? " என வினவும் ஒருபேதைப் பெண், "தேராமன்னா! செப்புவதுடையேன் என்று பேசும் நெஞ்சுரத் தைத் திடீரென்று பெற்றுவிட்டாளா? அவளுடைய அடிமனத்தின் ஆழத்தில் நிறைந்திருந்த உரமும் குறிக்கோளும் சந்தர்ப்பம் வரும்பொழுது இவ்வாறு அவளை வளர்த்துவிட்டன. மணிமேகலை வரலாறும் இவ்வாறானதே யாகும். சமுதாயத் தின் பிரதிநிதியாக உதயகுமரன் தோன்றுகிறான். பெண்கள், அதுவும் கணிகையர் குலத்தில் பிறந்துவிட்ட பெண்கள், ஆண் களின் வெறித்தனத்துக்கு இரையாக அமையவேண்டியவர்கள் என்று எண்ணி அதை வெளிப்படையாகவும் பேசும் இயல்புடை யவன் உதயகுமாரன். அவன் அவ்வாறு பேசிவிட்டு அவளை அடையவேண்டும் என்றும் கூறுகிறான். அவன் தன்னை அவமதித்துப் பேசியதைக்கூடப் பொருட்படுத்தாமல் அவன் பால் தன் மனம் செல்வதை வெளிப்படையாகக் கூறும் மணிமேகலை, 'கற்புத் தானிலள்: நற்றவ உணர்விலள்; வருணக் காப்பிலள்: பொருள் விலை யாட்டி என்று, இகழ்ந்தனன் ஆகிநயந்தோன் என்னாது புதுவோன் பின்றைப் போனது என்னெஞ்சம் இதுவோ அன்னாய் காமத்து இயற்கை: ' என்று பேசுகிறாள். ஒரே பிறப்பில் இத்தகைய மனநிலையிலிருந்து உயர்ந்து வீடுபேறடையும் நிலையை எய்துகிறாள் மணிமேகலை. இந்த வளர்ச்சிக்குக் காரணம் யாது? அவளுடைய நெஞ்சுரமும் ஆன்ம முன்னேற்றம் அடையவேண்டும் என்ற குறிக்கோளுமே யாகும். இந்த இரு பெண்கட்கும் பொது இயல்புகள் பல உண்டு. துன்பம் கண்டு மனம் தளராமை; உற்ற நோய் நோன்றல்; தாங்கள் அனுபவிக்கும் துயரத்திற்குக் காரணம் யார் என்று அறிந்திருந்தும் குறைகூறாமை; தம் நெஞ்சுரம் ஒன்றே துணை யாகக்கொண்டு எதிர்வரும் துன்பங்கள்ை அம்ைதியுடன் ஏற்று வாழ்தல்; பிறர் துயர் துடைக்க முன்வருதல் என்பவற்றுடன் ஒரு குறிக்கோளைக்கொண்டு வாழ்க்கையை நடத்தல் என்பவை அப்பொது இயல்புகளாம்.