பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 401 இந்ந இரண்டு தமிழ்க் காப்பியங்களின் தலைவிமார்கள் இவ்வாறு படைக்கப்பெற்றுள்ளமை சேக்கிழாரின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கவேண்டும். தமிழ் மண்ணில் தோன்றிய இரு காப்பியங்களும் இத்தகைய நுண்மையான கருத்தைக் காப்பியப் பொருளாக வைத்து அமைக்கப் பெற்றதை அறிந்த சோழ அமைச்சர் இதனை அப்படியே ஏற்றுக்கொள்ள முடிவு செய்துவிட்டார். அவருடைய காப்பியமும் நெஞ்சுரத்தைக் கொண்டவர்கள் வரலாறுகளைக் குறிப்பதாக அமையவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும். இத்தகைய ஒரு வளர்ச்சி தமிழகத்தில் தோன்றி வளர்ந்த முறையை மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவரல் வேண்டும். வீரத்தையும், காதலையும் புகழ்ந்த நெடும் பாடல்கள் நாளடைவில் வளர்ச்சி அடைந்து வாழ்க்கையை முழுவதுமாக வாழவேண்டிய குறிக்கோள்கள் மனிதனிடம் இருத்தல் வேண்டும் என்பதை மதுரைக்காஞ்சி மூலம் கோடிட்டுக் காட்டின. அதன் பின்னர்த் தோன்றிய திருமுருகாற்றுப்படை இந்தக் குறிக்கோளை இன்னும் சற்று வளர்த்துவிட்டது. வாழ்வை முழுவதுமாக வாழ்ந்தாலும் மனிதனுக்கு மனம் என்ற ஒன்று உண்டு. அந்த மனம் அமைதியடையவேண்டுமானால் குறிக்கோளில் ஒரளவு மாற்றம் வேண்டும். அந்த மாற்றம் என்பது இறையுணர்வு பெற்று 'சேவடி படரும் செம்மல் உள்ளமுடன்" வாழவேண்டும்' என்று கூறிற்று. குறிக்கோள் சேவடி படர்வது, அதற்குரிய சாதனம் செம்மல் உள்ளம், இவை இரண்டும் அமைந்தவர்கள் பெறும் பயன் 'இருள்நிற முந்நீர் வளை இய உலகத்து ஒரு நீயாகத் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில்.....' ஆகும் என்று அதே திருமுருகாற்றுப்படை கூறிச் சென்றது. சங்கப் பாடலில் கூறப்பெற்ற இந்த உறுதி, குறிக்கோள் இரண்டையும் பெற்றவர்கள் பெண்களேயாயினும் வீடுபேற்றை அடைய முடியும் என்பதைத் தமிழ்க் காப்பியங்கள் இரண்டும் வடித்துக் காட்டின. இந்த வளர்ச்சி இடையில் தோன்றிய காப்பியங்களில் காணப்படாமல் மறைந்துவிட்டன என்றாலும் சேக்கிழார் இந்த வளர்ச்சியை உணர்ந்துகொள்கிறார். ஒரு காப்பியம் என்பது நன்னெறியைப் புகட்டுவதுடன், அந்நெறியைக் கடைப்பிடித்து எவ்வாறு காப்பிய மாந்தர்கள் உயர்ந்தனர் என்பதையும் குறிப்பாகக் காட்டிச் செல்லவேண்டும். 'குறிக்கோளுடன்