பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 0.3 பெரியபுராணம்- ஓர் ஆய்வு வாழ்வதே மனித வாழ்க்கையின் தனிச் சிறப்பாகும்’ GID உண்மையை மதுரைக்காஞ்சி முதன் முதலாக ஆறிவிக்க, அக் குறிக்கோள் எத்தகையதாக இருத்தல் வேண்டும் என்பதைத் திருமுருகாற்றுப்படை விளக்கம் செய்ய, அததகைய குறிக்கோளை மேற்கொண்டு வாழ்பவர்கள் பெண்களாயினும் சமூகம் ஒதுக்கும் கணிகையராயினும் அவாகள உயாநது. யாவராலும் தொழப்படுவர் என்பதைச் சிலம்பும் மேகலையும் விவரிக்க இக் கருத்து தமிழ்ப் பண்பாட்டின் சாரமாக வளர்ந்து வந்ததை அறிய முடிகிறது. இடைக் காலத்தில் இது மறக்கப் பட்டாலும் சேக்கிழாரால் மறுபடியும் அறியப்பெற்று அவருடைய காப்பியத்தில் புத்துயிர் பெறுகிறது. மறைந்து கொண்டிருந்த தமிழர் பண்பாட்டின் உயிர் நாடியை அறிந்து, தேடி எடுத்துப் புத்துயிர் ஊட்டிய பெருமை சேக்கிழாருக்கே உரியதாகும். சேக்கிழார் பாடிய காப்பியத்தின் ஆணிவேர் போன்று விளங்கும் அடிப்படை, நெஞ்சுரம்-குறிக்கோள் என்ற இரண்டே ஆகும். எனினும் அவர் யாத்த காப்பியம் ஏனைய காப்பியங்கள் போல் அல்லாமல் தனித்தன்மை பெற்று விளங்கலாயிற்று. அடிக்குறிப்புக்கள் 1. தொல்காப்பியம் - எழுத்து-1-1-1; 1-1-8; 1-1-33 தொல்காப்பியம் - எழுத்து-நூல்மரபு-உரைவளம் - ஆ. சிவலிங்கனார் பக்கம் 86-88 தொல்காப்பியம் - எழுத்து 1-1-15, 16,17 தொல்காப்பியம்-செய்யுளியல் 78 தொல்காப்பியம்-செய்யுளியல் 171 தொல்காப்பியம்-செய்யுளியல் 235-239 தொல்காப்பியம்-அகத்திணையியல் 53 புறநானூறு 228, 246, 280 9. புறநானூறு 166, 305 10. புறப்பொருள் வெண்பா மாலை 163 I 1. Tamil Heroic poetry 12. Tamil Heroic poetry 31 2