பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வகுத்த காப்பிய நெறி 4 07 கண் எதிரில் நிற்கும் பொதுத்தன்மையைக் கவிஞர் கண்டு கொண்டார். எனவேதான் 'தொண்டு' என்ற ஒரு பண்பையே காப்பியத் தலைமை ஏற்குமாறு செய்துவிட்டார். சுந்தரரை நீங்கிய பிற அடியார்கள் வாழ்வில் தொண்டு இடம் பெற்றது போல் சுந்தரர் வாழ்வில் தொண்டு அத்துணை அளவு இடம் பெறவில்லை என்பது தெளிவு. அப்படியானால் சுந்தரரிடம் அவர் அன்பு பாராட்டவில்லையா? பேரன்பு பாராட்டினார்; ஆனால் காப்பியத் தலைவர் என்ற முறையில் அன்று! தாம் காப்பியம் எழுத மூலகாரணமாக அமைந்த வரலாறுகளைத் தொகுத்துக் கொடுத்தவர் என்பதற்காகவே நன்றி பாராட்டுகிறார். சேக்கிழார் சருக்கப் பிரிவினையில்கூடச் சுந்தரரைப் பின் பற்றுகிறார் தம் காப்பியக் கட்டுக்கோப்பில் சருக்கப் பிரிவினைகூடச் சுந்தரரின் திருத்தொண்டத் தொகையின் அடிப்படையிலேயே பிரித்துக் கொண்டார். இதனால் விளைந்த இடர்ப்பாட்டை அறியாதவரல்லர் சேக்கிழார். ஒருசில சருக்கங்கள் நூற்றுக் கணக்கான பாடல்களைப் பெறவும், ஒருசில சருக்கங்கள் ஒரு நூறுக்குட்பட்ட பாடல்களையே பெற்றுள்ளன. முதல் ஐந்து சருக்கங்கள் 1903 பாடல்களையும், வம்பறாவளிவண்டுச் சருக்கம் 1737 பாடல்களையும், பொய்யடிமையில்லாத சருக்கம் 116 பாடல்களையும், கறைக்கண்டன் சருக்கம் 47 பாடல்களையும் பெற்று விளங்குகின்றன. இந்தப் பிரிவினை ஒரு காப்பியத்தின் கட்டுக்கோப்புக்கு ஒவ்வாத முறையில், நிரவல் இல்லாத முறையில் அமைந்துள்ளன. ஏன் இவ்வாறு காப்பியப் புலவர் பிரிவினை செய்ய வேண்டும்? இந்த வரலாறுகளைத் தந்த பெருமகனாருக்கு நன்றி பாராட்டுதற்காகவேயாம். அவர் செய்த பிரிவினை தம் காப்பியக் கட்டுக்கோப்புக்கு ஊறுவிளைவிக்கும் என்று அறிந்திருந்தும் கவிஞர், இந்தப் பிரிவினையை அப்படியே மேற் கொள்கிறார். காரணம் வேறு ஒன்றும் இல்லை. சுந்தரர் பாடிய இத் திருத்தொண்டத்தொகை இறைவனால் அடியெடுத்துக் கொடுக்கப்பெற்றதாகும். இறையருள் முதலடி யைத் தொடுக்க அடியவர் பதிகத்தைப் பாடி முடித்தார். ஆதலின் அதன் கட்டுக்கோப்பைக் கலைக்கச் சேக்கிழார் விரும்ப வில்லை. அந்த வரிசை மாறாமல் புராணங்களை அமைக்கின்றார். சுந்தரருடைய வரலாற்றை ஒரேயடியாகப் பாடாமல் ஏயர்கோன் வரலாற்றிலும், கழறிற்றறிவார் வரலாற்றிலும், வெள்ளானைச் சருக்கத்திலும் இடைமிடைந்து பாடியதற்குக் காரணமும் இதுவேயாம். 28