பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 0 8 பெரியபுராணம்- ஓர் ஆய்வு காப்பிய நாயகராகிய சுந்தரர் முதல், இடை, கடை என்ற பகுதிகளில் வரவேண்டும் என்ற கருத்தால் இவ்வாறு பாடினார் என்று ஆய்வாளர் இதுவரைக் கூறிவந்ததை ஏற்க முடியாதோ என்ற ஐயம் தோள்றுகிறது. நம்பியாரூரர் பாடிய தொண்டத் தொகையின் முதலடியில் வரும் சொற்களை வைத்துச் சருக்கப் பெயர் ஈந்த காப்பியப் புலவர் திருமலைச் சருக்கம் என்று முதலிலும், வெள்ளானைச் சருக்கம் என்று ஈற்றிலும்தாமாக இரண்டு சருக்கப் பெயர்களை வழங்குகிறார். ஏயர்கோன் வரலாறும், சேரமான் வரலாறும் சுந்தரர் வரலாற்றுடன் பிரிக்க முடியாதபடிப் பின்னிப்பிணைந்துள்ளன. எனவே தடுத்தாட் கொண்ட புராணத்திலேயே வரலாறு முழுவதையும் கூறப் புகுந்தால் தொகை வைப்பின் முறையை மாற்ற நேரிடும். அதனைச் செய்ய அஞ்சிய கவிஞர் தொகை போகிற போக்கிலேயே புராணங்களை அமைத்தும்விட்டார். பரவை யாரிடம் இறைவனைத் தூதாக அனுப்பினார் என்ற ஒரே காரணத்துக்காகச் சுந்தரர் மேல் தீராத சினங் கொண்டவர் ஏயர்கோன். இந் நிகழ்ச்சி தவிர, அவர் வரலாற்றில் வேறு விசேடச் செய்தி ஒன்றும் இல்லை. தாம் கொண்ட கொள்கையின் எதிராக இறைவனே வந்து பேசினாலும் தம் கொள்கையை மாற்றிக்கொள்ள இணங்காத உறுதிப்பாடுடையவர் ஏயர்கோன். அவருடைய, கொள்கைப் பிடிப்பு, குறிக்கோள் என்பவற்றின் ஆழத்தைக் காட்டவே சுந்தரரை அவரிடம் அனுப்புகிறான் இறைவன். எனவே இந் நிகழ்ச்சிக்குக் காரணமான தூது சென்ற பகுதியை உடன் கூறினால்தான் ஏயர்கோனை உள்ளவாறு அறிய முடியும். எனவேதான் ஏயர்கோன் வரலாற்றில் தூது நிகழ்ச்சியும் அதற்குக் காரணமான சங்கிலியார் திருமணமும் இடம் பெறு கின்றன. திருத்தொண்டத் தொகை வழங்கியமைக்காக அவரிடம் நன்றி பாராட்டுகிறார் தொண்டத் தொகை முறைவைப்பை மாற்றச் சேக்கிழார் விரும்பாதது உண்மை என்றாலும் காப்பிய அமைப்பில் எவ்வளவு துாரம் தாம் உரிமை எடுத்துக் கொள்ளமுடியுமோ அவ்வளவு துரம் எடுத்துக் கொள்கிறார். தொண்டத் தொகைக்குத் தாம் எவ்வளவு நன்றி பாராட்டுகிறார் என்பதை அறிவிக்கவே ஒவ்வொரு சருக்கத்தின் இறுதியிலும் சுந்தரர்க்கு நன்றியும் வணக்கமும் கூறும் வழக்கத்தை மறவாமல் கடைப்பிடிக்கின்றார். அந்த நன்றிப் பெருக்கின் ஆழத்தைப் பல இடங்களிலும் காணலா