பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வகுத்த காப்பிய நெறி 4 0 9 மேனும் ஒர் இடத்தில் மிக மிக அற்புதமாகக் காட்டுகிறார். நான்காவது சருக்கமாகிய மும்மையால் உலகாண்ட சருக்கத்தின் இறுதியில் "நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்து ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்துத் தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன் வாசமலர்மென் கழல்வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்' என்று பாடிச் செல்கிறார். சைவர்கள் போற்ற வேண்டிய சிவனடியார் பெருமையினைச் சுந்தரர் எடுத்துக் கூறினதற்கு மற்றொரு சைவராகிய சேக்கிழார் நன்றி பாராட்டும் பாடலன்று இது. 'அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்துத் தேசம் உய்யுமாறு திருத்தொண்டத் தொகை என்ற பெயரில் பாடினாராம். அதனால் அவருக்குத் திருவாளன் என்ற பட்டத்தையும் நல்குகிறார் சேக்கிழார். சிவனடியார் வரலாறுகள் சைவர்கட்குமட்டும் என்ற குறுகிய வட்டத்தில் சேக்கிழார் நிற்கவில்லை. தொண்டு, குறிக்கோள் என்பவற்றை வலியுறுத்தும் வரலாறுகள் இவையாகலின் எல்லா உயிரும், தேசமும் இதனால் பயனடைந்தன என்று கூறுவதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். தொண்டாகிய பண்பு சைவர்கட்கு மட்டும் உரிய தனியுடைமை அன்று, பிறந்த உயிர்கள் அனைத்துக்கும் தேவைப்படும் பண்பாகலின், அதனை உடையவர்கள் வரலாற்றை மக்கள் அறிய எடுத்துரைத்தவரைத் திருவாளன் என்று போற்றுகிறார். காப்பிய நாயகராகச் சுந்தரரைக் கொள்ளவில்லை காப்பியப் புலவர் வரலாற்று முறைவைப்பில் எவ்வளவு தூரம் தொண்டத்தொகையைப் பின்பற்றுகிறார் என்பதையும் அதற்குரிய காரணத்தையும் அறிய முடிகிறது. இப் பதிகத்தின் பெயர் திருத்தொண்டத் தொகை என்பதாகும். இப் பெயரை யார் தந்தார்கள்? காப்பியக் கவிஞரே இப் பெயரைத் தந்தார் என்பதை அவர் பாடல் மூலம் அறிய முடிகிறது. 'துரத்தே திருக்கூட்டம் பலமுறையால் தொழுதுஅன்பு சேரத்தாழ்த் தெழுந்தருகு சென்றெங்தி நின்றழியா