பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 I 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறு அடியேன் என்று ஆர்வத்தால் திருத்தொண்டத் தொகைப் பதிகம் அருள் செய்வார்' " என்ற இப்பாடல் இக் கருத்தை வலியுறுத்தும். திருத்தொண்டர்கள் தொகை கூறும் அப் பதிகத்தில் தொண்டர் என்ற பெயர் இரு இடங்கள் தவிர எங்கும் ஆளப்படவில்லை. அடியார்க்கு அடியேன் என்றுதானே பதிகம் பேசுகிறது. அடியார் தொகை என்று பெயர் தந்திருந்தால் அதுவே பொருத்தமாக இருத்திருக்கும். அதைவிட்டுத் தொண்டத்தொகை என்று ஏன் சேக்கிழார் பெயர் சூட்டவேண்டும்? அப் பதிகத்தில் 'திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன் என்றும், 'செங்காட்டங்குடிமேய சிறுத் தொண்டர்க் கடியேன் என்றும் வரும் இரண்டு அடியார்கள் பெயர்களில் மட்டுமே தொண்டர் என்ற பெயர் வருகிறது. இதிலும் ஒரு வியப்பு என்னையெனில் இந்த இரண்டு பெயர்களும் அந்த அடியார்களின் இயற்பெயரல்ல; காரணப் பெயர்களாகும். இதனை நன்கறிந் திருந்தார் சேக்கிழார் என்பதை அப் புராணங்களின் மூலமாகவே அறிய முடிகிறது. திருக்குறிப்புத் தொண்டர் வரலாறு கூறப் புகுந்த கவிஞர், 'புண்ணியமெய்த் தொண்டர்திருக் குறிப்பறிந்து போற்றுநிலைத் திண்மையினால் திருக்குறிப்புத் தொண்டர் எனும் சிறப்பினார்' " என்றும், சிறுத்தொண்டர் புராணத்தில், மேதகையார் அவர்முன்பு மிகச் சிறியராய் அடைந்தார் ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல் ' என்றும் பாடுகிறார். தொகை முழுதும் அடியார் என்ற சொல் பயின்றாலும் இந்த இருவருட்ைய காரணப் பெயர்களும் சேக்கிழாரை மிகவும் சிந்திக்க வைத்துவிட்டன. பல்லவப் பேரரசின் மாபெரும் சேனாபதியாக இருந்தவரும், காஞ்சிமா நகரத்தில் ஏகாலியாக இருந்தவரும் ஒரே பட்டப் பெயரைக்