பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வகுத்த காப்பிய நெறி 4 I காரணப் பெயராகப் பெற்றனர். ஒரு சாதாரண ஏகாலியாரை ஒரு சேனாபதியின் சிறப்புக்கு உயர்த்தியது எது? அவருடைய தொண்டு ஒன்றேயாம். எத்தனையோ சேனாபதிகள் இருப்பவும் சுந்தரரால் பாடப்பெறும் சிறப்பைப் பரஞ்சோதியார் என்ற சேனாபதி ஏன் பெற்றார்? அவருடைய தொண்டு ஒன்றாலே அன்றோ? பிற துறைகளில் மலையும் மடுவும் போன்ற வேறு பாடுடைய சேனாபதியும், ஏகாலியாரும் இங்கு இடம் பெற்றது அவர்களிடம் காணப்பெற்ற தொண்டுள்ளம் என்னும் பொதுத் தன்மையால் அல்லவா? எந்த ஒன்றைச் சேக்கிழார் தம் காப்பியத்தின் உயிர்நிலையாக அமைய வேண்டும் என்று கருதினாரோ அதனையே காரணப் பெயராக அடியார்களுள் இருவர் பெற்றுள்ளனர். எனவே தொண்டரின் பெருமையைக் குறிப்பால் உணர்த்தவேண்டிக் காப்பியக் கவிஞர் அடியார் தொகை என்று அப் பதிகத்திற்குப் பெயரிடாமல் 'திருத் தொண்டத் தொகை' எனப் பெயரிட்டார். தொண்டுதான் காப்பியத் தலைமை இடம் பெறவேண்டும் என்று கருதிய கவிஞரின் எண்ணம் வலுப்படும் வகையில் இது அமைந்து விட்டது. எனவே நம்பியாரூரர் காப்பியத் தலைவர் என்று கவிஞர் கருதினார் என்ற வாதம் வலுவிழந்துவிடுகிறது. சுந்தரர்க்குத் தொடர்பில்லாத சோனாட்டைப் பாட எடுத்துக்கொண்டது ஏன்? நாட்டுச் சிறப்பில் (படலத்தில்) திருமுனைப்பாடி நாட்டைப் பாடாத காரணம் இதுவேயாம். அப்படியானால் சோணாட்டை ஏன் பாடவேண்டும்? ஒரு கவிஞன் எத்துணைத் தனித்தன்மை வாய்ந்தவனாயினும் அவன் வாழுங் காலத்தின் தாக்கத்தை முழுவதும் வெற்றிகொள்ள முடியாது என்ற திறனாய்வாளர் கூற்று மெய்யாகிவிடுகிறது. சிந்தாமணி, சூளாமணி, இராமகாதை என்பவை நாட்டு வளம் கூறுப்புகுந்து மிக அற்புதமாக ஒரு கனவு நாட்டைச் சிருட்டித்துக் கொண்டு பாடிவிட்டன. அவர்கட்கு இருந்த வாய்ப்பு என்னையெனில் இம் மாபெரும் துணைக் கண்டத்தின் எங்கோ ஒரு மூலையில் கோசலம், ஏமாங்கதம் என்னும் நாடுகள் இருந்ததாகக் கொண்டு தம் கற்பனை ஒன்றையே துணையாகக் கொண்டு அற்புதமாக நாட்டுப் படலம் பாடும் வாய்ப்பேயாம். அவர்கள் பாடலிற் கண்ட கனவு நாட்டுக்கும், உண்மையான கோசலம், ஏமாங்கதம் என்ற நாடுகட்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அக் கவிஞர்களின் கற்பனையில் தோன்றிய அந் நாடுகள் தமிழ் மக்களின் மனத்தில் ஒவ்வோர் இடத்தைப் பிடித்துக்கொண்டன. வரலாற்று