பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4夏罗 பெரியபுராணம்- ஓர் ஆய்வ அடிப்படையில் காப்பியம் புனைய வந்த சேக்கிழாருக்கு இத்தகைய வாய்ப்பு இல்லை. அன்றியும் அவர் சோழப் பேரரசின் தலைமை அமைச்சராகவும் இருந்தவர். திருமுனைப்பாடி நாடு எனப்பட்ட (இக்காலத்துத் தென்னார்க்காடு மாவட்டம்) சிறு பகுதியை அப்படிப் புகழ்ந்து பாட முடியாது. எனவேதான் சோணாட்டை நாட்டுப் படலத்தில் பாட எடுத்துக்கொள்கிறார். சிந்தாமணி, கம்பன், சூளாமணி என்பவற்றின் நாட்டுப் படலத் துடன் வைத்து ஒப்புமை செய்து பார்க்க எவரேனும் முனைந்தால் அவற்றுடன் போட்டியிடக் கூடிய பெருமை சோணாட்டுக்கே உண்டு. மேலும் அவை கனவு நாடுகள்; சோணாடு உண்மையில் உள்ளது. எனவே அவர் காலத்தின் தாக்கத்தால் சோணாட்டை எடுத்துக்கொண்டார். அன்றியும் தொண்டர் வரலாறுகள் கூறும் காப்பியத்தில் 62 தொண்டர்களில் 31 பேர் வாழ்ந்தது சோணாட்டிலாகும். சோழர்கள் ஆற்றிய சிவத் தொண்டும் மறக்கற்பாலதன்று. இவை அனைத்தின் காரணமாகவே அவர் சோணாட்டை நாட்டுப் படலத்தில் பாட எடுத்துக்கொண்டார். 'படலம்' என்ற பெயர் முன்னைய காப்பியங்களில் காணப் பெற்றாலும் தாம் செல்லும் புதுவழிக்கு ஏற்ப அந்தப் படலம் என்ற பெயரை விட்டுவிட்டுச் சருக்கம்' என்கின்ற பெயரை மேற்கொண்டார். அன்றியும் 7ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு முடிய வடமொழிக்கும் வைதிகத்துக்கும் தலைமையிடம் தந்த பல்லவர் ஆட்சிக்குட்பட்டிருந்த திருமுனைப்பாடி நாட்டைப் பாடுவதைக் காட்டிலும் தமிழை வளர்த்த சோழர் நாட்டைப் பாடுவது பொருத்தம் என்றும் அவர் கருதியிருக்கலாம். 'பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள் கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில் ஆட்டிய வளர்புலிச் சோழர் காவிரி நாட்டியல் பதனையான் தவிலல் உற்றனன்' " என்று பாடும்பொழுது 'தமிழுரை பயின்ற எல்லையுள்.... வளர் புலிச் சோழர்' எனக்கூறும் பகுதி பின்னர் இக் காப்பியத்தில் தமிழுக்கு இவர் தரப்போகும் ஏற்றத்தைக் குறிப்பால் உணர்த்த எழுந்த பகுதி என்றே கொள்ளத்தகும். : கவிஞனும் மனிதன்தான். அவனுக்கும் பிறரைப்போல விருப்பு வெறுப்புக்கள் இருக்கத்தான் செய்யும். சேக்கிழார் பிறந்தது தொண்டை நாட்டில், வாழ்ந்ததும், நூல் செய்த்தும் சோணாட்டில். என்றாலும் தொண்டை நாட்டை அவரால்