பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 I 4 பெரியபுராணம்- ஒா ஆய்வு வரலாற்று நாயகர்களாக வாழ்ந்த சோழர்களுள் இத்தகைய பண்பாடுடையார் யாரும் இலர். அவர்கள் வரலாற்றையும், அவர்கள் தலைநகரையும் பாடுவதானால் நடவாத ஒன்றைப் புனைந்துரையாக அவர்கள் வாழ்வில் ஏற்றிக் கூற நேரிடும். இந்த இக்கட்டில் அகப்படாமல் முற்றிலும் செவிவழிக் கதையான மனுவையும் அவன் ஆண்டதாகக் கூறும் திருவாரூரையும் எடுத்துக் கொண்டார் என்பதே நேரிது. சோணாட்டையும், திருவாரூரையும் பாடிய முறையில் அவருக்கு முன்னர்த் தோன்றிய காப்பியங்களின் நாடு, நகரப் படலங்களுடன் ஒப்ப வைத்து எண்ணத்தகுந்த சிறப்புடன் பாட முடிந்தது. கற்பனை நாட்டை, நகரத்தைப் பாடிய அவர்கள் எவ்வளவு சிறப்புடன் பாடினரோ அதே சிறப்புடன் வரலாற்றுச் சிறப்புடைய நாட்டையும் நகரத்தையும் பாடமுடிந்தது. தங்கள் காப்பியத்துக்கு ஏற்ற முறையில் அவர்கள் நாடு, நகரப் படலங்களைப் படைத்தனர். இக் கவிஞரும் தம் காப்பியத்துக் கேற்ற வகையில் நாடு, நகரச் சிறப்புக்களை அமைத்துக் கொண்டார் என்று காணமுடிகின்றது. ஏனைய காப்பியப் புலவர்களைப் போல ஒரே ஒரு காப்பியத் தலைவனையும் அவன் வாழ்ந்த நாட்டையும், அவன் வசித்த ஊரையும் பாடமுடியாத நிலையிலுள்ள சேக்கிழார் எவ்வளவு அழகாக இந்த இக்கட்டான நிலையை எதிர் கொண்டு அதில் வெற்றியும் பெறுகிறார் என்பதை ஒருவாறு காணமுடிகின்றது. உபமன்யு முனிவரின் கதை ஏன் இடம்பெற்றது? இனி இதற்கு மேலும் ஒருபடி சென்று அவர்கள் செய்யாத ஒரு செயலையும் செய்கின்றார். நாடு பாடும் புலவர்கள் அதிலுள்ள மலை, ஆறு என்பவற்றைக் கற்பனை நயத்துடன் பாடுவது இயற்கை. சோணாட்டையும், திருவாரூரையும் பாட முன்வந்த சேக்கிழாருக்கு ஒர் ஐயம் தோன்றுகிறது. தமிழகம் முழுவதிலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துள் வாழ்ந்த தொண்டர்களின் வரலாற்றைப் பாடும் பொழுது எவ்வளவு தக்கமுறையில் சோணாட்டையும், திருவாரூரையும் புகழ்ந்தாலும் பிற பகுதிகளைப் பற்றிக் கூறுவில்லையே என்ற ஐயம் தோன்றியது போலும். ஒரு நாட்டை விட்டுவிட்டு, ஒரு பிர்தேசம் அதாவது தமிழ் நல்லுலகம் முழுவதையும் வளங்கூற எடுத்துக் கொள்வது என்றால் காப்பிய மரபுடன் மோதுவதாக முடியும். அதே நேரத்தில் தமிழுலகம் முழுவதிலும் வாழ்ந்தவர்கள் பெருமையைக் கூறவேண்டுமானால் தமிழகம் முழுவ்தையும் புகழவேண்டும்.