பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வகுத்த காப்பிய நெறி 4 I 5 இந்த இக்கட்டான நிலைக்கு அற்புதமாகத் தீர்வு காண்கிறார். ஏனைய காப்பியப் புலவர்கள் செய்யாத ஒன்றைச் செய்வதன் மூலம் இதைச் சாதிக்கின்றார். நம்பியாரூரருடைய வரலாற்றை உபமன்யு முனிவர் ஏனைய மாதவர்கட்குச் சொல்கின்றார் என ஒரு தோற்றுவாய் செய்துகொண்டு தென்திசையின் சிறப்பு, தமிழகத்தின் சிறப்பு என்பவற்றைப் பாடுகின்றார். அதிலும் அது பிற காப்பியங்களின் வேறுபடாதிருக்க இப்பகுதிக்குத் 'திருமலைச் சிறப்பு எனத் தலைப்பு வழங்கிவிடுகின்றார். தாம் கூறவந்த சைவ சமயத்தின் தனி நாயகனான சிவபெருமான் உறையும் கயிலை மலையின் சிறப்பைக் கூறி அத்தகு கயிலையில் உபமன்யு முனி சுந்தரர் வரலாற்றைப் பிறருக்குக் கூறுகின்றார் எனத் தோற்றுவாய் செய்து கொண்டு பின்வரும் கருத்துக்களை அப் பகுதியில் பேசுகின்றார். ‘மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் தீதிலாத் திருத்தொண்டத் தொகைதர ' ஆலாலசுந்தரர் பிறந்தார் என்கிறார். ஏனைய திசைகளை விடத் தென்திசை எவ்விதத்தில் உயர்ந்தது? என்று முனிவர்கள் கேட்க உபமன்யு கூறுவதாகத் தமிழகத்தின் பெருமையைப் பேசு கிறார் கவிஞர். அத்தன் நீடிய அம்பலத் தாடும்.மற்(று) இத்திறம் பெறலாம் திசை எத்திசை: மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால்' 'காஞ்சி என்று உம்பர் போற்றும் பதியும் உடையது' 'செங்கையாளர் ஐயாறும் திகழ்வது 'பூசனைக்குப் பொருந்தும் இடம்பல ப்ேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை ' என்ற இப் பாடல்கள் மூலம் அவருடைய காப்பியம் ஏனைய காப்பியங்கள் போல் இல்லாமல் தனித்துவம் வாய்ந்ததாக விளங்கும் என்பதையும் குறிப்பாகப் பெறவைக்கின்றார். சிலம்பு முதல் கம்பன் வரைத் தோன்றிய காப்பியங்களை ஆக்கிய கவிஞர்கட்கும், சேக்கிழாருக்கும் பல வேறுபாடுகள் உண்டு. இளங்கோ, சாத்தனார், பெருங்கதை ஆசிரியர்