பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 I 6 பெரியபுராணம்- ஓர் ஆய்வு (கொங்குவேள்), திருத்தக்கதேவர், தோலாமொழித்தேவர், கம்பன் என்ற வரிசையில் யாரும் நாட்டை ஆளும் அமைச்சராக இருந்ததில்லை. தமிழகம் எங்கும் சுற்றித் திரிந்து அதன் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களையும், அவர்கள் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் வாழ்வில் உள்ள குறைவு நிறைவுகளை யும் இவர்கள் யாரும் காணவில்லை. இளங்கோ, சாத்தனார் என்ற இருவர் தவிர ஏனையோர் காப்பியங்கள் தமிழகத்துக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களில் வழங்கிய கதைகளின் தழுவலாக லின் தமிழகத்தைச் சுற்றிப் பார்த்து இவர்கட்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை என்ற வாதம் எழலாம். ஆனால் தமிழ் நாட்டில் தோன்றிய தமிழ்க் கவிஞர்கள் அன்று முதல் இன்றுவரை எந்தப் பிரதேசக் கதையை எடுத்துக்கொண்டு காப்பியம் புனைந் தாலும் தமிழ்நாட்டை மறப்பதே இல்லை. அவர்கள் காப்பியத் தில் வரும் நாட்டின் பெயரைச் சொல்லி வருணிக்கத் தொடங்கு கையில் தமிழ்நாட்டைத்தான் வருணிப்பார்கள். ஏமாங்கத நாட்டைப் பாடிய திருத்தக்கதேவரும், அரேபியாவைப் பாடிய உமறுப்புலவர் என்ற சீறாப்புராண ஆசிரியரும், எருசலேம் நாட்டை வருணிக்கும் இரட்சண்ய யாத்திரிக ஆசிரியர் கிருஷ்ணப் பிள்ளையும் இவ் விதிக்கு விலக்கல்லர். எனவே இவர்கள் தமிழகத்தையாவது முழுவதும் சுற்றி வந்திருப்பரேல் நால்வகை நில மக்களின் வாழ்க்கை முறையை ஒருவாறு புரிந்து கொண்டிருக்க முடியும். என்ன காரணத்தாலோ இது நடைபெற வில்லை. மெய்ம்மைகட்கு முதலிடம் தந்து பாடியவர் இவர் ஒருவரே இந்தக் காப்பியக் கவிஞர்கட்கு எதிரே சேக்கிழார் ஒருவர் மட்டும் தனித்து விளங்குகிறார். தலைமை அமைச்சர் என்ற முறையில் நாட்டின் இண்டு இடுக்குகள் எல்லாம் சுற்றி அங்குள்ள கோயில் கல்வெட்டுக்கள், வாழ்ந்த நாயன்மார்கள் பற்றிய செவிவழிக் கதைகள், என்பவற்றை விடாமல் அறிந்து தொகுத்து வைத்துள்ளார். ஏனைய காப்பிய ஆசிரியர்கள் போல் அல்லா மல் உண்மையில் இத் தமிழக எல்லைக்குள் வாழ்ந்த வரலாற்று நாயகர்கள் பற்றிப் பாட முடிவு செய்தமையின் இவ்வாறு ஒவ்வோர் இடமும் சென்று வரலாற்று அடிப்படையில் மெய்ம் பைகளை (Facts) கண்டறிய முற்பட்டார். திருஞானசம்பந்தர் திருவிழிமிழலையிலிருந்து மதுரை சென்ற வழியைச் சேக்கிழார் வருணிக்கிறார். இன்றும் அதுவே வழியாக அமைந்ததுள்ளதை அறியலாம். சோழ மன்னர் ஈடுபட்டுப் படித்த சிந்தாமணியில் அவன் மனம் ஈடுபடுவதைத் தடுக்கவே அவன் வேண்டுகோளின்