பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார்வகுத்த காப்பிய நெறி 41 7 படிப் பெரியபுராணம் இயற்றினார் என்று சேக்கிழார் புராணம் கூறும் செய்தி உண்மைக்கு முற்றிலும் புறம்பானதாகும். மிக நீண்ட காலமாகவே இத்தகைய ஒரு காப்பியத்தைப் பாட வேண்டும் என்று முடிவு செய்திருந்த அமைச்சர்அதற்குரிய தகவல்களைச் சேகரிப்பதில் பெரிதும் கவனம் செலுத்தியதாக நினைய வேண்டியுள்ளது. அரசன் கேட்டுக் கொண்டான் என்ற உற்சாகத்தில் திடீரென்று யாத்த காப்பியமன்று பெரியபுராணம். தமக்கு வழிகாட்டியாக இருந்த நம்பியாரூரரின் திருத் தொண்டத் தொகையும், அதனை ஒரளவு விரித்து ஒதிய நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியையும் பழுதறக் கற்ற இக் கவிஞர் இவை இரண்டிற்கும் அப்பால் நாயன்மார்கள் பிறந்த ஊர்தோறும் சென்று வரலாற்று உண்மை களையும், செவிவழிச் செய்திகளையும் சேகரித்து அவற்றை நம்பி யின் திருவந்தாதியுடன்ஒப்பிட்டு நீண்ட ஆய்வு நடத்தியுள்ளார். சுந்தரரின் தொண்டத் தொகை இறையருள் உந்துதலினால் பாடப் பெற்றதாகலின் அதனை அப்படியே ஏற்றுக் கொண்டார் சேக்கிழார். ஆனால் நம்பியாண்டார் நம்பியின் அந்தாதியை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. நம்பி சுந்தரர் போல இறையருளைப் பெற்றுத் திருவந்தாதியைப் பாடினார் என்பதை யும் சேக்கிழார் ஒப்பவில்லை. அன்றியும் முதலாம் இராசராசன் காலத்தில் நம்பியின் உதவியுடன் திருமுறைகளைக் கண்டெடுத்து நம்பி திருமுறைகளாக வகுத்தார் என்று திருமுறை கண்ட புராணம் கூறுவதையும் சேக்கிழார் ஏற்றதாகத் தெரியவில்லை. திருமுறை கண்ட புராணம் கூறும் செய்திகட்கு வேறு ஆதாரம் இன்றேனும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளும் இந்நாள் தமிழ் அறிஞர்கள் சிலர் இந்த மாபெருஞ் செய்தியைச் சேக்கிழார் ஏன் குறிக்கவில்லை என்பதனை ஏனோ ஆயாமல் விட்டு விட்டனர். தொண்டத்தொகை பாடினார் எனச் சுந்தரர்க்குத் திருவாளன் எனப் பட்டம் வழங்கிய சேக்கிழார் அந்தப் பதிகமும் பிற தேவாரங்களும் உலகம் பெற்று உய்யுமாறு உதவியவர் நம்பி களும் இராசராசனும் என்பதை நம்பியிருந்தால் அதனைக் குறிக்காமல் விட்டிருப்பாரா? திருமுறைகளும் தொண்டத் தொகையும் நம்பி இல்லையானால் இல்லை என்பதல்லவா திருமுறைகண்ட புராணக் கதை? அப்படிக் கூறுவதில் கடுகளவு உண்மை இருப்பின் இந்தப் பாடலுடன் இன்னும் ஒரு பாடல் இயற்றி நம்பிக்கு நன்றி செலுத்தியிருப்பார் சேக்கிழார். எனவே பிற்காலத்தார் கட்டுக் கதை என விடற்பாலதே நம்பி திருவந்தாதியிற் கூறும் பல செய்திகளைச் சேக்கிழார் குறிக்காமல் விட்டு விடுகிறார்.