பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 I 8 பெரியபுராணம் - ஓர் ஆய்வு நம்பியாண்டார்நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியைப் பாடிச் சுந்தரரின் சுருங்கிய ஒவ்வோர் அடிக்கும் ஓரளவு ஓவிளக்கம் தந்தார் என்று கூறி அதற்கு நன்றி பாராட்டுகிறார் சேக்கிழார். "அந்த மெய்ப்பதி கத்து அடியார்களை நந்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி புந்தி ஆரப்புகன்ற வகையினால் வந்தவாறு வழாமல் இயம்புவாம்' என்ற முறையில் நம்பியின் உதவியைப் போற்றும் சேக்கிழார் அந்த நம்பிகள் தேவாரங்களைக் கண்டெடுத்ததாகவோ அவற்றைத் திருமுறைகளாக வகுத்ததாகவோ குறிப்பிடவில்லை என்பது சிந்திக்க்த்தக்கது திருத்தொண்டத் தொகை பாடித் தந்தமைக்குச் சருக்கந்தோறும் சுந்தரருக்கு நன்றிபாராட்டும் காப்பியக் கவிஞர் அதனை விரித்து அந்தாதியாகப் பாடிய நம்பியை இந்த ஒர் இடத்தில் போகிற போக்கில் குறிப்பிட்ட தன்றி வேறு யாண்டும் குறிப்பிடவே இல்லை. வரலாற்று அடிப்படையில் மெய்ம்மைகளை ஊர்தோறும் சென்று சேகரித்த சேக்கிழாருக்கு, இந்த அடிப்படையில் இல்லாமல், செவிவழிக் கதைகளை மட்டும் நம்பி அந்தாதி பாடிய நம்பியிடம், அதிக நம்பிக்கை ஏற்படவில்லை. I 2 'திருமுறை கண்ட புராண ஆசிரியர் யார் நம்பியாண்டார் நம்பிகள் முதல் இராசராசன் காலத்தர் அல்லர், அவர் முதல் ஆதித்த சோழன் காலத்தவரே என்பதை அரும் பாடுபட்டு நிறுவும் பேரறிஞர் கா. வெள்ளைவாரணனாரும் திருமுறைகண்ட புராணத்தையும், சேக்கிழார் புராணத்தையும் வ்ேத் வர்க்காக நம்புவது வியப்பை அளிக்கிறது. இவ்விரண்டு புராணங்களையும் உமாபதிசிவம் செய்தார் என்ற கருத்து எப்படி எப்பொழுது வந்ததோ தெரியவில்லை. 1859இல் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் வெளியிட்ட பெரியபுராணப் பதிப்பில், திருமுறை கண்ட புராணம் உளது. அதில் ஆசிரியர் பெயர் குறிப்பிடப் பெற வில்லை. நாவலர் பெருமான் பெய்ர் தாங்கி 1898இல் வெளிவந்த பெரியபுராணம் முதற் பதிப்பு, சதாசிவப் பிள்ளையால் வெளியிடப் பெற்றது. அதில் திருமுறைகண்ட புராணம் இடம்பெறவில்லை. 14 ஆண்டுகளில் பின் இதே சதாசிவப்பிள்ளை இரண்டாம் பதிப்பை வெளியிட்டபொழுது திருமுறை கண்ட புராணத்தையும் சேர்த்து வெளி யிட்டார். ஆனால் ஆசிரியர் பெயர் குறிப்பிடவில்லை. மூன்றாம் பதிப்பு வரை அவ்வாறே தொடர்ந்தது. பின்வந்த பதிப்புகளில் யாரோ உமாபதி சிவாச்சாரியார் தான் திருமுறைகண்ட புராண ஆசிரியர் எனச் சேர்த்து விட்டனர். 1888இல் ஆறுமுகத் தம்பிரான் உரையுடன் வந்த பதிப்பிலும் திருமுறை கண்ட புராண ஆசிரியர் பெயர் குறிப்பிடப்பெறவில்லை. (இச் செய்திகளை நூலாசிரியனுக்குத் தந்துதவியவர். பெரியபுராண ஆராய்ச்சி