பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வகுத்த காப்பிய நெறி 4 l 9 அறிஞர் சேக்கிழார் அடிப்பொடி, திரு. டி.என். ராமச்சந்திரன் அவர்கள்) இதன் பயனாக விளைந்த தொல்லைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை. சைவ நன்மக்களால் பெரிதும் போற்றப்படும் உமாபதிசிவம் என்ற பெயரைத் தலைப்பில் யாரோ அச்சிட்டதற்காக அதிற் கூறப் பெற்ற அத்தனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பதும் பொருத்தமாகப் படவில்லை. சேக்கிழார் காப்பியத்தின் உயிர்நாடி எது இன்று வரைச் சேக்கிழார் பற்றி ஆய்பவர்கள் அனைவரும் சைவத் திருமுறைகளில் ஒன்றாகிய பெரியபுராணத்தைப் பாடினவர் என்று மட்டுமே கொண்டு சமயக் கண்ணோட்டத் துடனேயே அவரையும் அவரது படைப்பையும் ஆய்கின்றனர். சேக்கிழார் காப்பியம் பொதுவாக மக்கள் அனைவருக்கும், சிறப்பாகத் தமிழருக்கும், வாழ்க்கையில் ஒரு குறிக்கோளுடன் வாழவேண்டும் என்ற பேருண்மையைப் போதிக்கவும் தொண்டின் பெருமையைப் பறைசாற்றவும் தோன்றிய நூல் என்பதனை மறந்து விட்டு அதனை ஆயப்புகுவது சரியன்று. இந்த அறிவு புகட்டும் பணியைக் காப்பியம் மேற்கொண்டுள்ள நுணுக்கத்தைச் சமயவாதிகள் மறந்து விட்டனர்! தொண்டு என்ற பண்பே தலைமை பெறுகிறது இவ்வாறு கூறுவதால் அவர் சமயத்தைப் புறக்கணித்தார் என்று கருதிவிட வேண்டியதில்லை. சமயத்தின், அதுவும் சைவ சமயத்தின் உயிர்நாடியே தொண்டுதான் என்பதை விரித்துக் கூற வந்ததே பெரியபுராணம் என்று கொள்ளவேண்டும். ஏனைய கவிஞர்களைப் போலச் சிறந்ததொரு தமிழ்க் காப்பியஞ் செய்ய வேண்டும் என்று சேக்கிழார் கருதியிருப்பாரேல் அவர் திருத் தொண்டர் கதைகளை எடுத்துக் கொண்டிருக்க மாட்டார். காப்பியம் இயற்றுவதென்பது அவருடைய தலையாய குறிக் கோளன்று; தொண்டின் சிறப்பைக் கூறுவதே அவருடைய தலையாய நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறக் காப்பியத்தை இடைநிலைப் பொருளாக (Medium) வழியாகக் கொண்டார் சேக்கிழார். அவர் தம் குறிக்கோள் என்ன என்பதையும், அதற்குக் காப்பியம் இடைநிலைப் பொருளாக அமையமுடியுமா என்பதையும், தம் கருத்தை நிறைவேற்றக் காப்பியம் இடம் தருமா என்பதையும், நன்கு தெரிந்து கொண்டுதான் இச் செயலில் ஈடுபடலானார். அவருக்கு முன்னர்த் தோன்றிய காப்பியங்களுள் சிலம்பும், மேகலையும் நீங்கலாகப் பிறவெல்லாம் அரசர் பற்றியன. அவற்றில் பல்சுவையும் பயின்றுள்ள நிலை. மக்கள்