பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42台 பெரியபுராணம்- ஓர் ஆய்வு மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்தது. இப் பல்வேறு நிகழ்ச்சி களின் நடைமுறைக்கு ஏற்ப விருத்தப்பாவை அக் காப்பியங்கள் பயன்படுத்தியிருந்தன. அதிலும் கம்பநாடான் விருத்தப்பாவின் ஒசைச் சிறப்பை எந்த அளவிற்குப் பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்குப் பயன்படுத்திவிட்டான். அடுத்து யார் அப்பாவைப் பயன்படுத்தினும் கம்பனுடன் ஒப்பு நோக்குவர் என்ற நுணுக் கத்தையும் சேக்கிழார் அறிந்தே இருந்தார். இவர்கள் பாடிய ஒன்பான் சுவையுள் அடங்காததும் அப்பாற்பட்டதுமான பக்திச் சுவை ஒன்று தான் அவருக்கு நிலையாக நிற்கக்கூடியது. பிற சுவை நிகழ்ச்சிகள் அவர் எடுத்துக்கொண்ட காப்பியத்தில் இரா; இருந்தாலும் அவற்றிற்கு அதிக இடம் கொடுக்கமுடியாத நிலை உண்டு. இத்தனை இடையூறுகளையும் அவர் அறிந்தே அதில் ஈடுப்பட்டார். அரசருடைய வாழ்க்கையைச் சித்தரிக்கத் தொடங்கி, பல மனங்கள் செய்துகொண்டு, போர் முதலியவற்றில் ஈடுப்பட்ட அவர்கள் வாழ்க்கையை விரிவாகப் பாடிவிட்டு, இறுதியில் அவர் கள் வாழ்க்கையை வெறுத்துத் துறவு மேற்கொண்டார்கள் என்ற பகுதியையும் காப்பியத்தில் ஒட்டவைத்து விட்டுச் சமயச் சார்பான காப்பியம் பாடினார் என்ற பெயரை அவர்கள் பெற்றுவிட்டார்கள். காப்பியஞ் சிறப்பதற்குரிய நிகழ்ச்சிகள் எதுவும் சேக்கிழார் மேற்கொண்ட காப்பியத்தில் இல்லை. கொள்கையைக் கடைப்பிடித்தலில் இடையூறு வரவே, உயிரை விட்டார்களே தவிரக் கொள்கையைக் கைவிடவில்லை என்ற முறையில்தான் அறுபதுக்கும் மேற்பட்ட வரலாறுகள் சென்றன. சேக்கிழாரின் தனிச் சிறப்பு என்னையெனில் இத்தகைய சமய அடிப்படையில் வாழ்ந்தவர்களின் வரலாறுகளை வைத்துக் கொண்டு, ஒரளவு வளர்ச்சியடைந்து முழு வடிவம் பெற்றுவிட்ட காப்பியத்தின் கூறுகளை அடக்கி, இந்தவரலாறுகளை ஏற்றுக் கொள்ளும் முறையில் அதனைப் படைத்ததேயாகும். காப்பிய உறுப்புகளைப் பக்தர்களின் வரலாற்றைப் பேசும் பகுதிகளாக மாற்றி அமைத்தது அவருடைய பேராற்றல் மூலமாக நடைபெற்றது. காப்பியக் கட்டுக்கோப்பையும் அதன் இயல்பை யுங்கூட ஒரளவு மாற்றித் தம் கருத்துக்கிசையச் செய்துவிட்டார். காப்பியப் பாவிகமும் தொண்டேயாகும் தொண்டு என்னும் பண்பைக் காப்பியத் தலைமை இடத்தைப் பெறுமாறு செய்து விட்டமையின் உதிரி வரலாறுகள் என்று குற்றம் சாட்ட யாரும் முன் வரார். உதிரி வரலாறுகள்