பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.2.2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, ஏனைய காப்பிய ஆசிரியர்கட்கில்லாத மற்றொரு சிறப்பும் சேக்கிழாருக்கு உண்டு எல்லா விதங்களிலும் காப்பியம் பாடத் தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்துங்கூட அவர் தாம் விரும்பிய பொழுது பாட முன் வரவில்லை. ஒரு மாபெருங் காரியம் நிகழ வேண்டுமாயின் அது இறைவனது கட்டளையின்படி நடக்க வேண்டுமே தவிரத் தாமாக ஒருவரால் செய்யப்படக்கூடாது என்று எல்லா நாட்டிலு முள்ள பெரியோர்களும் நம்பினர். அறிவுத் தொடர்புடையதாக வும்,கற்பார்க்கு இதயம் களிப்பதாகவும் உள்ள ஒன்றை மனிதன் தானே கர்த்தாவாக நின்று செய்ய முற்படலாம். ஆனால் மானுட சாதி முழுவதற்கும் பயன்பட வேண்டிய ஒரு பெருங் காரியத்தைச் செய்ய முன் வருபவன் இறையருளின் துணை கொண்டு, இறைவன் ஆணைக்குக் கட்டுப்பட்டே அதைனைச் செய்ய வேண்டும். நம் காலத்தில் வாழ்ந்த மகாத்மா காந்தியடிகள், நாடு முழுவதும் தயாராக இருந்தும், இறைவனின் பிரதிநிதியாக உள் நின்றுணர்த்தும் ஆணை கிடைக்கவில்லை என்று சத்யாக்கிரகப் போரைப் பன்முறை தொடங்காமல் தள்ளிப்போட்டார். பலரும் எதிர்பாராத நாளில் திடீரென்று தொடங்கினார். சுவர்க்க நீக்கம் என்ற மாபெரும் காப்பியத்தை எழுதிய மில்ட்டனும் தெய்வீக ஒலி தன்னுள் கேட்ட பின்பே காப்பியத் தைத் தொடங்கியதாகக் கூறுகிறான். அத் தெய்வீகக் குரல் தன் காப்பியத்தைப் பாட உதவிற்று என்று கூடக் கூறாமல் தான் பயன்படுத்தும் சொற்களைக் கூட அதுவே தந்தது என்ற கருத்தை, 息铃始攀歌Who deignes Her nightly Visitation unimplor'd, and dictates to me Slumbering, or inspieres Easie my unpremeditated Verse ** என்ற மேலே கண்ட வரிகளில் மில்டன் கூறியிருப்பதை நோக்க வேண்டும். சமய அடிப்படையில் மாபெருங் காப்பியம் இயற்றப் புகும் கவிஞர்கள் தங்கள் ஆற்றல் எத்துணைப் பெரிதாக இருப்பி னும் அதைமட்டும் நம்பி இறங்குவதில்லை. இறையருள் உள் நின்று உணர்த்துவதாலேயே தாம் இதனைச் செய்வதாக அவர் கள் நினைத்தது மட்டும் அன்று; வெளிப்படையாகக் கூறவும் செய்தனர்.