பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வகுத்த காப்பிய நெறி 42 3 இவர் புலமைக் காப்பியம் பாட முன்வரவில்லை ஏனையவர்கள் போலப் புலமைக் காப்பியம் பாடுவதாக இருந்திருப்பின் சேக்கிழார் தம் அமைச்சர் பதவியை உதறி எறிருந்திருக்க வேண்டிய தேவை இல்லை. அப்பதவியில் இருந்து கொண்டே காப்பியம் பாடியிருக்கலாம். ஆனால் ஈடு இணை யற்ற முறையில் மக்கள் உய்வதற்காக ஒரு முயற்சியில் ஈடுபடுப வர்கள் அதனை முழுநேரப் பணியாகக் கொண்டால்தான் முடியும். நினைவு இருக்கும் நேரம் முழுவதும் தங்கள் பணிக்கே செலவிட வேண்டும் நிலையில் உள்ளவர்கள் அமைச்சர்ப் பதவியை உதறாமல் இருக்க முடியாது. பாண்டியப் பேரரசிலும், சோழப் பேரரசிலும் தலைமை அமைச்சுத் தொழில் பூண்ட இருவர் தம் பதவியை உதறித்தள்ளி இறைவன் பணிக்குத் தம்மை அர்ப்பணித் துக் கொண்டனர். அதன் பயனாக முறையே திருவாசகமும், பெரியபுராணமும் தோன்றின என்பதை மனத்தில் இருத்திக் கொள்வது நலம். இதனை மனத்துட் கொண்ட பிறகு, சேக்கிழார் ஏன் நீண்ட காலம் காப்பியத்தைத் தொடங்காமல் இருந்தார் என்ற வினா விற்கு விடை கிடைத்துவிடும். என்று இறைவன் கட்டளை கிடைக்கிறதோ அன்றே பணியைத் தொடங்குகின்றார். சிதம்பரத்தில் சேக்கிழாருக்கு அக் கட்டளை கிடைத்தது. தாம் எடுத்துக் கொண்ட பொருளின் அளவிலாப் பெருமையையும் தமது இயலாமையையும் மனத்துட் கொண்டு தயங்கி நின்ற வர்க்கு இறைவன் 'உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுத்தான். எனவே அவன் ஆணை பெற்று இக் காப்பியம் தோன்றியமையின் இதனை மிக்க கவனத்தோடும், கருத்தோடும் தகுந்த மரியாதையோடும் நாம் அணுகவேண்டும். சேக்கிழாருக்கு வழிவகுத்துக் கொடுத்த நம்பியாரூரருக்கும் இறைவன் இவ்வித உதவியைச் செய்தான். தனக்கு வழி காட்டிய சுந்தரருக்கு இறைவன் அடி எடுத்துக் கொடுத்தது போலவே தனக்கும் அடி யெடுத்துக் கொடுக்க வேண்டும் என்று சேக்கிழார் எண்ணி யிருத்தல் கூடும். எண்ணியர் திண்ணியராகலின் எண்ணிய எண்ணியாங்கு எய்தினார் என அறிகிறோம். வீரம் என்பதற்கு இவர் கண்ட புதுப்பொருள் தமக்கு முன்னர்த் தோன்றிய காப்பியப் புலவர்கள் வீரம் என்ற சொல்லுக்கு உடல் வீரம் எனப் பொருள் கொண்டு தம் காப்பிய நாயகர்களை வீரர் என்று கூறிப் போயினார். ஆனால் சேக்கிழார் இதனை வீரம் என்று கருதவில்லை. இதில் ஒரு 29