பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 பெரியபுராணம்- ஓர் ஆய்வு வியப்பு என்னையெனில் பெருங்கதை, சிந்தாமணி, சூளாமணி என்பவற்றின் ஆசிரியர்கள் நம்மைப் போன்ற மனிதர்களாக, துறவிகளாக வாழ்ந்தவர்கள். ஆனாலும் போர்க்களத்திலும் படைக் கலங்களைக் கொண்டு போரிடுவதையே வீரம் எனக் கருதினர். இவர்களுள் யாரும் போரை நேரே பார்த்திருக்க நியாயமில்லை. என்றாலும் போரை விரிவாகப் பாடுகின்றனர். அதில் வீரர் என்பவர் யார் எனக் கூறுகின்றனர். ஆனால் உண்மையிலேயே போரைப் பார்த்திருக்கக் கூடிய கடமையுடைய அமைச்சர்ப் பதவியிலிருந்த சேக்கிழார் போர் செய்பவர்களை வீரர் என்று பாராட்டவில்லை. இதன் எதிராக யாருக்கும் எவ்விதத் தீங்கையும் மனத்தினாலும் நினையாத அமைதியான வாழ்க்கை வாழும் தொண்டர்களை வீரர் என்று பாராட்டுகிறார். உடல் வீரத்தையும், போரையும் நன்கு அறிந் திருந்த சேக்கிழார் இவ்வாறு கூறுவதால் நாம் அதற்குத் தனி மதிப்புக் கொடுத்துக் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் நினைப்பதுபோல, நம் போன்ற பிற மனிதனிடம் போர் செய்வது வீரமன்று. இதன் எதிராக மனிதன் தன்னுள் பதுங்கி நின்று அல்லல் விளைக்கும் பொறி புலன்களுடன் போர் செய்து அவற்றை வெற்றி கொள்வது தான் வீரம் என்பது அவர் கருத்தாகும். இங்கும் போர் உண்டு; ஆனால் புறப் பகையுடன் நிகழ்த்தும் போரன்று. அகப் பகையாகிய ஐவருடன் ஒருவன் போர் புரிந்து அவற்றை வென்ற பிறகே தொண்டன் என்ற தகுதியைப் பெறுகிறான். எனவே அத்தகையவர்களை, தொண் டர்களை, வீரர் என்று சேக்கிழார் குறிக்கிறார். பெருங் காப்பியத்துள் வரும் போர் புறத்தே நிகழும். சேக்கிழார் காப்பியத்துள் நிகழும் போர் அகத்தே நிகழ்வது. புறப்போர் புரியும் வீரத்தைவிட அகப்போர் புரியும் வீரம் சிறந்தது புறப்போரைவிட இந்த அகப்போர் கடுமையானது, ஆபத் தானது. பின்விளைவு கொடுமையானது. புறப்போரில் ஒரு முறை. ஏன்? பலமுறை தோற்றுங்கூட ஒருவன் மறுபடி வெற்றி யடைய முடியும். ஆனால் இந்த அகப்போரில் தோற்றால் பின் விளைவு மிகவும் கொடுமையாக இருக்கும். புலனடக்கம் செய்ய உதவியான வீரத்தைக் கைவிட்டு, ஒரே ஒரு முறை இன்பத் துறையினில் எளியரான திருநீலகண்டர் பல்லாண்டுகள் அதன் பின் விளைவை அனுபவித்தார். எனவேதான் புலனடக்கம் பெற்ற தொண்டர்களை வீரர் என்று கவிஞர் பாராட்டுகிறார். இவ்வாறு தன்னைத்தான் ஒருவன் வெற்றி கொள்வது தான்