பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 பெரியபுராணம்- ஓர் ஆய்வு அவருடைய காப்பியத்தில் புதைந்து கிடக்கும் பேராற்றலையும் உணர்ச்சிப் பெருக்கையும் காணவிரும்பாமல் கண்களை மூடிக் கொள்வதாக அமைந்துவிடும். யாரோ கூறிய காப்பியப் புற அமைப்பு இலக்கணத்தைப் பெரிய புராணத்தில் தேட முயன்று அது கிடைக்காததால் இதனைக் காப்பியமன்று என்று கூறுவது நம்முடைய அறியாமையை வெளிப்படுத்துவதாகும். பெரிய புராணமாகிய காப்பியத்துக்கு அதுவே இலக்கணமாகும். அதன் புற வடிவ அமைப்பு முறை தமிழ்க் காப்பிய உலகில் புதிதாக வகுக்கப் பெற்ற வடிவ அமைப்பு முறையாகும். இக் காப்பியத்தைப் பயிலப் பயில அதனுடைய கற்பனை ஆற்றல் அப் பாடல்களில் மறைந்து நிற்பதைக் காணமுடியும். இதனை இயற்றிய கவிஞனுடைய சொந்த அனுபவம் எந்த அளவிற்கு இக் காப்பியத்தில் இடம் பெற்று நம்மை உலுக்கும் அளவிற்கு மறைந்: துள்ளது என்பதையும் உணரமுடியும். என்றோ எங்கோ வாழ்ந்த தொண்டர்களின் சரிதம் கூறும் இப்பாடல்களில் புதைந்துள்ள உணர்ச்சியின் ஆழம் நம் மனத்தைவிட்டு அவ்வளவு எளிதில் அகல்வதில்லை. அழகான கவிதைகள் என்று நாம் விரும்பி ஒரு காலகட்டத்தில் படித்த பல கவிதைகள் நம் வயதும் அனுபவமும் ஏறஏறப் பழைய முறையில் நம்மை ஆட்கொள்வ தில்லை. வளர்ந்துவிட்ட நம்மை ஆட்கொள்ளும் திறன் அந்தக் கவிதைகட்கு இல்லை என்பதை ஒவ்வொருவர் அனுபவத்திலும் காணலாம். ஆனால் வயது முதிர்ந்து அனுபவம் பழுத்து, முழுத்தன்மையை நாம் அடையச் சேக்கிழாரின் கவிதை கள் மேலும்மேலும் வலுப்பெற்று நம்மைப் பற்றிக்கொண்டு பரவசப்படுத்துகின்றன. சோழப் பேரரசின் வீழ்ச்சியின் தொடக்கத்தில் தோன்றியது பெரியபுராணம் ஒரு சமுதாயத்தை உள்ளடக்கிய பேரரசு, மேலும் மேலும் வளர்ந்து கொண்டு செல்லும் நிலையிலும், அச் சமுதாயத்தின் மொத்த உணர்ச்சிகளைக் காட்டக்கூடிய காப்பியம் தோன்றுவ துண்டு. இதன் எதிராக, ஒஹோ என்று வாழ்ந்த ஒரு சமுதாயம் தளர்ச்சியடைந்து இறங்குமுகம் நோக்கிச் செல்லும் நிலையிலும் அச் சமுதாயத்தில் சிறந்த காப்பியம் தோன்றுவதுண்டு. இறங்கு முகத்தில் இருக்கும் சமுதாயத்தைத் தட்டி எழுப்பி அதன் பழைய பெருமையையும் அப்பெருமைக்கு அடித்தள்மாயிருந்த காரண்த் தையும் எடுத்துக் கூறி மறுபடியும் புத்துயிர் பெற்று முன்னேற வேண்டுமானால் பழைமையிலுள்ள சிறந்தவற்றை எடுத்துக் கொண்டால் ஒழிய முன்னேற முடியாது என்று அடித்துக் கூறவும்