பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வகுத்த காப்பிய நெறி 427 அச் சமுதாயத்தில் காப்பியம் தோன்றுவதுண்டு எனத் திறனாய் வாளர் கூறுவர். சேக்கிழார் வாழ்ந்த காலம் இரண்டாங் குலோத்துங்கனுடைய காலம். இரண்டாங் குலோத்துங்கன் கி.பி.1133 முதல் 1146 வரை ஆட்சி புரிந்தவன். ஆனால் இவன் ஆட்சிக் காலத்தில் போர் என்ற ஒன்று பெரும்பங்கு வகித்ததை அறியமுடிகிறது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தே வெளிப் படையாகத் தெரியாவிடினும் சோழப் பேரரசு ஆட்டங் காணத் தொடங்கிவிட்டது. மூன்றாங் குலோத்துங்கன் சோழப் பேரரசின் கடைசிப் பேரரசனாவான். மூன்றாங் குலோத்துங்கன் இறுதி நாட்களில் பாண்டியர்கள் சோழப் பேரரசைத் தகர்க்க முற்பட்டதைக் காணும் தீயூழ் அவனுக்கு இருந்தது. அவனை அடுத்து வந்த மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் என்பவருடன் சோழப் பேரரசு மறைந்துவிட்டது. கி.பி.1279ல் அது மறைந்தது என்றால் அதற்கு எண்பது ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த கவிஞருக்கு இதை உணரமுடிந்தது. இரண்டாங் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன் என்ற இருவரில் யாருடைய காலத்தில் சேக்கிழார் வாழ்ந்தார் என்று வைத்துக் கொண்டாலும் நுண்மாண் நுழைபுலமும், திருவருள் துணையும் பெற்றிருந்த அக் கவிஞர்பிரான் இப் பேரரசின் அத்தமனத்தை நன்கு அறிந்திருந்தார் என்றுதான் கொள்ளவேண்டியுள்ளது. கூத்தன் முதலானவர்கள் உலா முதலியவற்றைப் பாடி இச் சோழர்களின் போர் வெறியை அதிகப்படுத்தினர் என்பதையும் குறிப்பாக அறிதல்வேண்டும். போர் வெறியிலும் வெற்றி எக்களிப்பிலும் மிதக்கும் இக் குலோத்துங்கர்களையும், தமிழக மக்களையும் எவ்வாறு தட்டி எழுப்புவது? தலையாலங்கானத்து நெடுஞ்செழியனுக்கு மதுரைக் காஞ்சிபாடி மாங்குடி மருதனார் அறிவு கொளுத்தியது போலச் சேக்கிழார் பெரியபுராணம் பாடிச் சோழர்கட்கு அறிவு புகட்ட முன்வந்தார். மூன்றாங் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுக் கள் மூலம் பாலறாவாயன், சேக்கிழான் என்ற பெயரைப் பலரும் வைத்துக் கொண்டிருந்தமை புலனாகிறது. அவர் அமைச்சராக இருந்தமையின் அப் பெயரைப் பலரும் தாங்கினரேயன்றிப் பெரிய புராணம் பாடியதற்காக அன்று என்பதயுைம் அறியவேண்டும். இரண்டு குலோத்துங்கர்களுடைய நூற்றுக்கணக்கான சிறிய பெரிய கல்வெட்டுக்கள் அனைத்தும் அவர்கள் செய்த போர்களை யும், பெற்ற வெற்றிகளையும் குறிப்பிடுகின்றனவே அன்றி உலாப் பாடிய ஒட்டக்கூத்தனையோ, பெரியபுராணம் பாடிய சேக்கிழாரையோ, குறிப்பிடவே இல்லை. இன்றுவரைக் கிடைத்த: வெளியான கல்வெட்டுக்களின்படி இது கூறப்பெறுகிறது.