பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42.8 - பெரியபுராணம்- ஓர் ஆய்வு சங்க காலத்தில் ஒரு பாண்டியன், "ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக, உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின், புலவர் பாடாது வரைக என் நிலவரை' 1 9 என்று பாடுவதன் மூலம் புலவர்களிடமும், அறிஞர்களிடமும்தான் வைத்திருந்த பெருமதிப்பை வெளியிடுகிறான். ஆனால் இடைக் காலச் சோழர்கள் பெரிய வல்லரசுகளை நிறுவிய போதிலும் கல்விக்கும், அறிஞர்கட்கும் புலவர்கட்கும் எவ்வளவு மதிப்புக் கொடுத்தார்கள் என்று கூற முடியவில்லை. மாமன்னன் இராசராசனும், அவன் மகன் இராசேந்திரனும் வடநாட்டி லிருந்து வந்த பாசுபதர்களாகிய தங்கள் குலகுருமார்கட்கு வேண்டுமான அளவு நிலதானம் செய்து அதனைக் கல்லிலும் பொறித்தனர். ஆனால் எந்தக் கல்வெட்டிலும் கம்பன், ஒட்டக் கூத்தன், சேக்கிழார் என்ற மாபெருங் கவிஞர்பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. இந்தச் சோழ மன்னர்கள் பரசஸ்தி என்ற பெயரில் தங்கள் வெற்றிச் சங்கைத் தாங்களே ஊதிக் கொண்டார் களேயன்றி அவற்றைக் கவிதையில் வடித்துத் தந்த ஒட்டக்கூத்தன் போன்றவர்களைக்கூடத் தம் கல்வெட்டுக்களில் பொறிக்க வில்லை. அக்காலத் தமிழ் மன்னர்களின் பண்பாட்டில் இருந்த குறை இது என்று கூறுவதில் தவறு இல்லை. 'புலவர் பாடும் புகழுடையோராய் வாழ்வதில் பெருமையடைந்தனர் சங்க கால அரசர்கள். எந்த நாட்டில் அறிஞர்கட்குச் சரியான வரவேற்பு இல்லையோ அந்த நாட்டின் நாகரிக, பண்பாட்டு வளர்ச்சியில் அதனை ஒரு பெரிய ஒட்டையாகத்தான் கருதவேண்டும். இந்த நிலையில் இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சியிலேயே சோழப்பேரரசு ஆட்டங் கண்டுவிட்டதை அறிந்த சேக்கிழார், குறிக்கோள் இல்லாமல் மக்களும் மன்னனும் வாழ்ந்தால், எவ்வளவு சிறப்புடனும் செல்வத்துடனும் அமைந்தாலும் அவ் வாழ்வு கடைகால் இல்லாத கட்டடம் போலத்தான் என்பதை வெளியிட முயன்றதன் பயனே பெரியபுராணமாகும். அத்தகைய நிலையில் மக்களுக்கும், மன்னனுக்கும் அறிவு கொளுத்தும் பணியை மேற்கொண்டார். ஆனால் அவர்கள் செய்த பணியை மன்னர்கள் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொண்டனர் என்பதைப் பொறுத்தே அவர்கள் வாழ்வும் தாழ்வும் அமைகின்றன. முதலமைச்சராய் இருந்த ஒருவர் அப்பதவியைத் துறந்துவிட்டு ஒரு மாபெரும் காப்பியம் புனைந்தார். ஆசிரியர் பெயர் தெரியாத 'சேக்கிழார் புராணம்' என்ற நூல் முன்னுக்குப் பின்