பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வகுத்த காப்பிய நெறி 429 முரணாகச் செய்திகளைத் தருகிறதே தவிர எந்த மன்னனும் இத்தகைய ஒரு செய்தியைக் கல்வெட்டில் பொறிக்கவில்லை. கோயிலில் நந்தா விளக்கெரிக்கச் சாவா மூவாப் பேராடு வழங்கு வதைப் பெரிதாக நினைத்துக் கல்லில் வெட்டினார்கள். மன்னன் பெற்ற ஒவ்வொரு சிறு வெற்றியையும் பெரிது படுத்திக் கல்லில் பொறித்தார்கள். ஆனால் பெரியபுராணம் பாடப்பட்டதைக் கல்லில் பொறிக்கும் தகுதியுடையதென்று எந்த மன்னனும் கருத வில்லை. இந்தக் குறைபாடு இத் தமிழ் மன்னர்கள் கல்விக்கும், அறிஞர் கட்கும் சரியான மதிப்புத் தரவில்லை என்பதைத்தான் காட்டு கிறது. இக் கருத்து கசப்பானதாக இருக்கலாம். ஆனால் இது தான் உண்மை. இத்தகைய ஒரு சமுதாயம் வீழ்ச்சி அடைவதில் வியப்பு ஒன்றும் இல்லை.அது குறிக்கோளை இழந்து வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதைத்தான் பெரிய புராணம் குறிப்பாக எடுத்துக் கூறுகிறது. இதனை வலியுறுத்துவ தன் மூலம் இன்ப வேட்டையாடும் மக்களையும் போரில் பொழுது போக்கி இறுமாந்து நிற்கும் மன்னர்களையும் தட்டி எழுப்பி அவர்கள் முன்னோர்களுடைய வாழ்க்கையின் ஆணிவேர் எதில் இருந்தது என்பதைக் காட்டவே கவிதை புனைந்தார் சேக்கிழார். சாக்கரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர், ஞானிகளைக் கவனியாமையால் கிரேக்க நாகரிகம் வீழ்ச்சி யுற்றது. கம்பன், சேக்கிழார் போன்ற கவிஞர் ஆய ஞானிகளைக் கவனியாமையால் சோழப் பேரரசும் ஏன் தமிழ் நாகரிகமும் வீழ்ச்சி அடைந்தன. வீழ்ச்சிப் பாதையில் வேகமாகச் செல்லும் சோழப் பேரரசைத் தடுத்து நிறுத்திப் பழைய நிலைக்குச் செலுத்த இறுதியாகச் செய்யப் பெற்ற முயற்சிதான் பெரிய புராணம். அந்நூல் காப்பியமாகப் படைக்கப் பெற்றதன் நோக்கம் மக்கள் விரும்பிப் படித்துப் பயனடைவார்கள் என்ப தாலேயாம். இத்தகைய மாபெருங் குறிக்கோளை மனத்திற் கொண்டு சேக்கிழார் காப்பியம் இயற்றினார் என்ற அடிப்படையை அறிந்து கொள்ள முயலாமல், பிற்காலத்தில் தோன்றிய காப்பிய இலக்கணம் என்ற குடுவைக்குள் பெரியபுராணத்தை அமுக்க முயன்றால் குடுவை உடையும் என்பது உறுதி. (அறிஞர் கி.வா. ஜகந்நாதன் அவர்கள் தாம் எழுதிய தமிழ்க் காப்பியங்கள் என்ற நூலில் பெரியபுராணம் காப்பியமே அன்று என்பார்.) இத்தகைய பெருங்கவிஞர் இயற்றும் நூல்கட்கு இலக்கணம் அவர் கள் வகுப்பதேயாம். மனிதனை அல்லாமல் தொண்டு என்ற