பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£ 3 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு பண்பைக் காப்பிய நாயகன் இடத்தில் வைத்துப் பாடினார் ான்றால் அதுவே இலக்கணமாகும். போர் செய்து மாய்வது உண்மையான வெற்றியன்று; தன்னைத் தானே வெற்றி கொள்வதுதான் உண்மையான வெற்றி என்று கூறினால் அதுவே இலக்கணம். உடுத்தியுள்ள கந்தைகூட மிகை என்று கருதி, ஒட்டையும் செம்பொன்னையும் ஒன்றாக நினைத்து, எல்லா உயிர்களிடமும் ஈர அன்பு காட்டி, அவ்வுயிர்கட்குத் தொண்டு செய்வதில் தம் உயிரையும் இழக்க நேரிட்டால் மகிழ்ச்சியுடன் உயிரைக் கொடுப்பதே வீரர்களின் செயல் என்று கூறினால் அதுவே அவருடைய காப்பியத்துக்கு இலக்கணமாக அமைய வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. சிலம்பில் தொடங்கிப் பெரியபுராணத்தில் முடியும் இந்தக் காப்பியத் தொடரில் உள்ள காப்பியங்கள் அனைத்தும் ஒன்று போல ஒன்று இல்லை. எனவே இவை அனைத்துக்கும் பொது இலக்கணம் என்ற பெயரில் ஒர் இலக்கணம் அமைக்க முற்படுவது தவறாக முடியும். அடிக்குறிப்புக்கள் திருநாவுக்கரசர் புராணம் 11 சண்டேசர் புரணாம் 60 தடுத்தாட்கொண்ட புராணம் 201 திருமுறை 7-39-3 திருமுறை 7-39-6 திருக்குறிப்புத் தொண்டர் புராணம் 112 சிறுத்தொண்டர் புராணம் 15 நாட்டுச் சிறப்பு 1 நகரச் சிறப்பு 36 10. திருமலைச் சிறப்பு 25 11. திருமலைச் சிறப்பு 32,33,34,35,36 12. திருமலைச் சிறப்பு 39 13. பன்னிரு திருமுறை வரலாறு-பாகம் பக்கம் 14-16 14. தடுத்தாட் கொண்ட புராணம் 159 15. தடுத்தாட் கொண்ட புராணம் 162 16. தடுத்தாட் கொண்ட புராணம் 154 17. நாட்டுச் சிறப்பு 6 I 8. PARADISE LOST BOOK IX 21-23 19. புறநானூறு 72,(13-16)