பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பெரியபுராண மூலங்கள் தேவாரங்கள், அம்மையின் பாடல்கள், சேரர் பாடிய உலா, கோவை என்பவை சிறந்த மூலங்கள் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் தோன்றுவதற்கு மூலமாக இருந்தவை சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பிகள் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியும் எனக் கூறப்பெறுகிறது. இவற்றையல்லாமல் மூவர் முதலிகள் அருளிய திருமுறைகள், காரைக்காலம்மையார் பாடிய மூத்த திருப்பதிகம், இரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி என்பவையும் சேரமான் பெருமாள் இயற்றிய திருக் கயிலாய ஞானவுலா, பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை என்பவையும் சேக்கிழாருக்குப் பயன்பட்டன. 11ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ள சில நூல்கள் இவற்றைப் போல் ஆதாரத்துடன் கூடியவை என்று கூற முடியாதவையும், பதினொன்றாம் திருமுறையில் இடம் பெற்றிருப்பவையுமான நக்கீரரின் நூல்கள், கல்லாடர், பட்டினத் தார் பாடிய நூல்கள், நம்பியாண்டார் நம்பி பாடிய 10 நூல்கள் என்பவற்றுடன் திரு ஏகாதசமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்பவையும் உதவின. இந் நூல்கள் பெரும்பாலும் ஏதோ ஒன்று அல்லது இரண்டு நாயன்மார்களைப்பற்றியே எழுந்தனவாகும். இவற்றையல்லாமல் இன்று நமக்குக் கிடைக் காத பல நூல்களும் உதவியிருக்கும். இவை தவிர, தில்லை உலா என்ற நூல் நம்பியால் குறிக்கப்படாத பல செய்திகளைக் குறித்தலின் அதுவும் பயன்பட்டிருக்கலாம் என இராசமாணிக்க னார் குறிக்கிறார். 12ஆம் நூற்றாண்டில் விளங்கியவராகலா னும் சோழப் பேரரசில் முதலமைச்சர் பொறுப்பைச் சில காலம் சிறப்புடன் வகித்தவராகலானும் அந் நாளில் பெரு வழக்காக இருந்த கல்வெட்டுச் செய்திகளையும் ஆழ்ந்து கற்றிருந்தார் என்பதில் ஐயம் இல்லை. . . சேக்கிழார் காலத்துக்கு முன்னரே பெரியபுராணத்துள் காணப் பெறும் நாயன்மார்களுள் சிலருடைய வரலாறுகள் இத்