பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.32 பெரியபுராணம்- ஓர் ஆய்வு தமிழக எல்லையைக் கடந்து சென்று பிற நாடுகளிலும் பரவி விட்டன. அவ்வாறு பரவிய வரலாறுகளுள் மிகமிகச் சிறப்பு வாய்ந்ததும், மிகவும் அதிகமான இடங்களில் பரவியதுமான வரலாறு காரைக்காலம்மையாரின் வரலாறு ஆகும். இப்பெரு மாட்டியார் மூவர் முதலிகளுள் மூத்தவராய திருஞானசம்பந்தரா லும் குறிக்கப் பெறுகிறார் ஆகலின் இவர் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டை ஒட்டி இருந்திருக்க வேண்டும். இப் பெருமாட்டி யார் தம் உடம்பை வனப்பு நின்ற தசைப் பொதி’ என்று தாமே கூறுதலின் அழகிய தம் உடலை வெறுத்து இறைவனை வேண்டிப் பேய் வடிவு எடுத்துக் கொண்டார் என்று பெரியபுராணங் கூறுகிறது. சேக்கிழாருக்கு முன்னரே நாயன்மார்கள் வரலாறுகள் தமிழக எல்லை கடந்தும் சென்றுள்ளன. ஆனால் பெரியபுராணம் தோன்றுவதற்கு இரண்டு நூற்றாண்டுகட்கு முன்னர் இராசேந்திர சோழனின் கங்கை கொண்ட சோழபுரத்தில் சுவர்ச் சித்திரத்தில் இறைவன் நடனமாட, காரைக்கால் அம்மையார் தாளம் போடுவதாக உள்ள புடை ஓவியம் இடம் பெற்றுள்ளது. தஞ்சையை அடுத்துள்ள திருத்துருத்தி என்ற குற்றாலத்தில் இவருடைய செப்புத் திருமேனி இருக்கிறது. பழைய பல்லவர், சாளுக்கியர் என்பவர்கள் காலத் திலேயே தமிழகத்தின் செல்வாக்கு கம்போடியா, இந்தோனேஷியா, பாலி முதலிய இடங்களில் அதிகமாகப் பரவி யிருந்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளாகிய இவற்றில் பொது வாகவும், கம்போடியாவில் சிறப்பாகவும் தமிழர்கள் அதிகம் போற்றி வழிபடும் நடராஜ வடிவம் பல கோயில்களில் இடம் பெற்றிருந்தமையை அறிகிறோம். இதிலும் ஒரு தனிச் சிறப்பைக் காண முடிகிறது. பெரியபுராணம் தோன்றிய தமிழகத்தில்கூட நடராஜ வடிவம் உள்ள எல்லாக் கோயில்களிலும் அவ் வடிவத்தின் அடியில் காரைக்கால் அம்மை வடிவம் உள்ள கோயில்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவையேயாகும். காரைக்கால் அம்மை கீழை நாடுகளில் பெற்ற சிறப்புக்குக் காரணம் ஆனால் கம்போடியாவில் பென்டாசிராய் (Banteai Srei) என்ற இடத்தில் உள்ள கோவிலும் கோபுரமும் காமர் கலைக்குப் (Khemer art) பெயர் போனவை. இக் கோவில் கீழைக் கோபுரத்தில் ஒரு வளைவை அமைத்து அதில் தென்னாட்டு நடராஜ வடிவை அமைத்துள்ளனர். நடராஜரின் இடப்புறம் ஊர்த்துவ வடிவுடைய