பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண மூலங்கள் 4.3.3 குழலை ஒருவர் வாசிக்க வலப்புறத்தில் பேய் வடிவில் காரைக் காலம்மையார் அமர்ந்திருக்கிறார். இங்குக் காணப்பெறும் கலைக் கருவூலங்களை ஆய்ந்து நூல் எழுதிய 'மெரில் பெனிஸ்ட்டி (Mireille Benisti) என்பார் இப் பகுதியில் பல இடங்களிலும் இருந்த காரைக்கால் அம்மையின் பேய் வடிவங் களைச் சேகரித்து 'நொம்பென் (Phnom penh) அருங்காட்சிய கத்தில் வைத்துள்ளமை பற்றியும் எழுதியுள்ளார். இவை ஒருபுறம் இருக்க வேட் பாஸ்ட் (Wat Baset) என்ற இடத்தில் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புடை ஓவியம் ஒன்றுள்ளதை எடுத்து விவரிக்கின்றார். இந்த ஒவியத்தின் சிறப்பு என்னையெனில் நடராஜர் தாண்டவத்தை வலப்புறம் இருந்து உமை காணவும் காரைக்காலம்மை இடப்புறம் இருந்து காணவும் உள்ள முறையில் இது அமைக்கப் பெற்றுள்ளமையேயாம். வாட்டெக் (Vatek) என்ற இடத்தில் உள்ள மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் பத்துக் கைகளுடன் இறைவன் நடனமாடும் சிற்பம் பல இடங்களில் உடைந்து காணப் பெறுகிறது. நொம் கிஸோர் (Phnom Chisor) கோவிலின் கீழைக் கோபுரத்தில் இரு கைகளுடன் இறைவன் ஆடும் கோலம் காண்பிக்கப் பெற்றுள்ளது. அவனுக்கு வலப்புறம் காரைக்காலம்மையார் பேய் வடிவில் அமர்ந்து தாளம் வாசிக்கிறார். தென்கிழக்கு ஆசியாவில் காரைக்காலம்மை வரலாறு பெற்றிருந்த இந்தச் செல்வாக்கை, திரு. சி. சிவராமமூர்த்தி அவர்கள் தாம் எழுதிய 'நடராஜா' என்ற நூலில் விரிவாகக் கூறியுள்ளார். இவற்றை யல்லாமல் இன்று பூரீலங்கா என்றழைக்கப்படும் இலங்கையில் பொலநறுவை என்ற இடத்தில் காரைக்காலம்மை யின் தனி வடிவம் ஒன்று(பேய் வடிவில்) செப்புத் திருமேனியாக உள்ளதை அந்த ஊர் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். இது 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர் கூறுவர்.' கடல் கடந்த நாடுகளில் கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை விளக்கம் பெற்றிருந்த காரைக் காலம்மையின் தனிச் சிறப்புக்கு ஏதேனும் காரணம் இருந் திருக்குமோ என்று ஆய்வதில் தவறு இல்லை. கண்ணப்ப நாயனாரும், அம்மையார் காலத்திலோ அதனை அடுத்த காலத்திலோ இருந்திருக்க வேண்டும். கீழைச் சாளுக்கியர், பல்லவர் செல்வாக்கில் இருந்த பொத்தப்பி நாட்டில் வாழ்ந்த அப்பெரியாரின் வரலாறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில்