பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43.4 பெரியபுராணம்- ஓர் ஆய்வு செல்லாமல் காரைக்கால் அம்மையின் வரலாறு மட்டும் என் சென்றது என்ற வினாவிற்கு விடை காண்பது எளிது. காரைக்கால் அமைந்துள்ள தமிழகத்தின் கிழக்குக்கரைப் பகுதிகளிலிருந்து தென்கிழக்கு ஆசியாவுடன் வாணிகத் தொடர்புள்ளவர்கள் இன்றும் உள்ளனர். மரக்கலம் மூலம் இவர்கள் பண்டு தொட்டே வெளிநாடு சென்று வாணிபம் நடத்தினமையின் 'மரக்கலக் காரர்கள்' என்ற பெயரைப் பெற்றனர். இப் பெயரே பின்னர் மருவி மரைக்காயர்கள் என வழங்கலாயிற்று. நபிகள் நாயகம் தோற்றுவித்த சமயம் இங்குப் பரவுவதற்குப் பன்னூறு ஆண்டு களின் முன்னரே இந்த மரக்கலக்காரர்கள் தென்கிழக்கு ஆசியா வுடன் தொடர்பு கொண்டிருந்தமையால் தங்கள் பகுதியில் பிறந்து பெருமை பெற்ற காரைக்காலம்மையின் வரலாற்றைத் தாங்கள் செல்லும் இடங்களில் பரப்பினதில் வியப்பு ஒன்றும் இல்லை. கருநாடகத்தில் இக்கதைகள் அதிகம் பரவக் காரணம் யாது? இனித் தமிழகத்தின் வடமேற்கிலும். வடக்கிலும் அமைந் துள்ள கருநாடகம், ஆந்திரம் என்ற பகுதிகளிலும் பெரியபுராணக் கதைகள் பன்னெடுங்காலம் முன்பே பரவி இருந்தன என அறிய முடிகிறது. இவை இரண்டு பகுதிகளிலும் பரவிய அளவு முதலிய வற்றைக் கண்டால் ஆந்திரத்தைவிடக் கருநாடகப் பகுதியில் இவ் வரலாறுகள் அதிகம் பரவின என அறியலாம். அதற்கும் ஒரு காரணம் உண்டு. தமிழகத்தில் மூவர் முதலிகளும் நாயன் மார்களும் சைவத்தைப் பரப்ப முனைந்ததைப் போலவே கருநாடகத்தில் வீர சைவத்தைப் ப்ரப்ப பசவர் தோன்றினார். எனவே சைவம் என்ற வகையில் நாயன்மார்கள் வரலாறுகள் கருநாடகத்தில் அதிகம் கால்கொள்ள ஏதுவாயிற்று. கி.பி.115011 60 வாக்கில் தோன்றிய 'வாசனாஸ் என்ற நூலில் சிறுத் தொண்டர் வரலாறு இடம் பெறுகிறது. இந்நூலாசிரியர் ஏறத்தாழச் சேக்கிழாரின் காலத்தில் இருந்தவராவார். கி.பி.11.25 இல் எழுந்த பண்டைக்கல்வெட்டு ஒன்றில் காரைக்கால் அம்மை என்ற பெயர் காணப்படுகிறது. " ஹரிஹரரின் 'ரகளே அப்பகுதியில் வழங்கிய கதைகளை அடிப்படையாகக் கொண்டது இதனை அடுத்து ஹரிஹரர் என்பவர் 'ரகளே என்ற கவிதை அமைப்பில் பெரியபுராண வரலாறுகளைக் கன்னட ஆக்கம் செய் கின்ற முறையில் ஒரு நூலை இயற்றினார். ஆனால் இதில்