பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 பெரியபுராணம்- ஓர் ஆய்வு சேக்கிழார் தாம் புராணம் பாட முற்படுமுன் மேலே கூறப் பெற்ற அத்துணைத் தகவல்களையும் சேகரித்து அவற்றை ஆயந்துள்ளார் என்று நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. இவற்றுள் தக்கவை என்று தாம் கருதிய பகுதிகளை மட்டுமே அக் கவிஞர் ஏற்றுக் கொண்டார். அல்லாதவற்றை ஒதுக்கி விட்டார். அவருக்கு வழிகாட்டியாக அமைந்த நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலுக்கு இதே முறையைத்தான் மேற்கொண்டார். தமக்கு வழிநூலாக அமைந்தது திருவந்தாதி என்று, அதனைப் பாடிய நம்பிக்கும் பெரியபுராணத்துள் நன்றி பாராட்டினாலும் அவரை அப்படியே கவிஞர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது முன்னரும் விளக்கப் பட்டது. சமணர் கழுவேற்றம்பற்றிக் கவிஞர் பாட ஆதாரம் யாது? வடக்கு கனராப் பகுதியில் அமைந்துள்ள 'பனவாசி’ (Bamavasi) என்ற ஊர்க்கோவிலில் கி.பி. 11ஆம் நூற்றாண்டு வாக்கில் அறுபத்து மூவருடைய வரலாறுகளில் சிலரைப்பற்றிப் புடைச்சிற்பங்கள் அமைக்கப் பெற்றன. அவ்வூர்க் கோவிலில் பல கல்வெட்டுக்கள், சமணருக்கும் வீர சைவர்கட்கும் இடையே நடை பெற்ற போராட்டங்களை விரிவாகப் பேசுகின்றன. பல சமணர் கள் இப் போராட்டங்களில் துன்புறுத்தப்பட்டனர் என்றும் கொல்லப்பட்டனர் என்றும் கல்வெட்டுக்களும், புடைச் சிற்பங் களும் அறிவிக்கின்றன. இச்செய்தி மிகவும் புதுமையானது. " ஆனால் இவ்வாறு மாற்றுச் சமயத்தாரைத் துன்புறுத்தும் பணியில் வீர சைவர் மட்டுமே ஈடுபட்டனர் என்று கருத வேண்டா. அதே புடைச் சிற்பங்கள் பல சமணர் வீர சைவர் களைக் கொன்றதாகவும் அறிவிக்கின்றன. கருநாடகத்தைப் பொறுத்தமட்டில் சமணர் சைவர் போராட்டங்களில் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு சமயத்தார் அடுத்தவர்களைக் கொன்று குவித்தனர் என்பதை அறிய முடிகிறது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரைப் பல்லவர், பாண்டியர் நாடுகளில் இவர்கள் ஆட்சியின் முற்பகுதியில் சமணம் பரவி, அரசர்களையும் தம் செல்வாக்கில் வைத்திருந்ததை அறிகின்றோம். இருவரும் சமயம் மாறியபொழுது மகேந்திரவர் மனோ, நின்றசீர் நெடுமாறனோ இவர்களைத் துன்புறுத்திய தாகவோ கொடுமை செயத்தாகவோ எவ்விதச் செய்தியும் இல்லை. தமிழகத்தில் கிடைத்த நூற்றுக் கணக்கான கல்வெட்டுக் களில் ஒன்றாவது இத்தகைய சமயப் போராட்டம் நடந்த