பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண மூலங்கள் 4 37 தாகவோ சமணர்கள் தாக்கப்பட்டதாகவோ அறிவிக்கவில்லை. அப்படி இருக்கவும் கருநாடகத்தில் இத்தகைய போராட்டமும் அவர்கட்கு இழைக்கப்பட்ட கொடுமையும் கல்வெட்டிலும் புடைச் சிற்பங்களிலும் இடம் பெற்றிருப்பது வியப்பைத் தருகின்ற ஒன்றாகும். தமிழகத்தில் எங்கும் கூறப்படாத இதனை ஏன் பாடினார்? சேக்கிழாரைப் பொறுத்தவரைத் தக்க ஆதாரங்கள் இல்லாமல் எதனையும் பாடும் பழக்கம் இல்லை என்பதைப் பெரியபுராணத்தை நன்கு கற்றவர்கள் எளிதில் அறிய முடியும். அப்படி இருக்கவும் திருஞானசம்பந்தர் புராணத்தில் சமணர்கள் பிள்ளையாரிடம் வாதில் தோற்றுக் கழுமரம் ஏறினார்கள் என்று பாடியுள்ளார். இத்தகைய ஒரு நிகழ்ச்சிக்கு வேறு எவ்வித ஆதாரமும் இல்லை. கல்வெட்டுக்களிலோ தேவாரத்திலோ இந்நிகழச்சிக்கு எவ்விதச் சான்றும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சமயப் போர்கள் நிகழ்ந்த துண்டு. மன்னனின் செல்வாக்குப் பெற்றிருத்தமையின் திருநாவுக்கரசருக்குக் கொடுமை இழைத்தது முதலான செயல் கள் நிகழ்ந்துள்ளன. சமணர்கள் நாவரசருக்குக் கொடுமை இழைத்தனர் என்பதற்கு அவருடைய பாடல்களிலேயே அகச் சான்றுகள் உண்டு. 'வஞ்சனைப் பாற் சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த நஞ்சமு தாக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே.'" 'கல்லினோடு எனைப்பூட்டி அமண்கையர் ஒல்லைநீர்புக தூக்க என்வாக்கினால் நெல்லுநீள்வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேனே' என வரும் அகச் சான்றுகளை வைத்துக்கொண்டே காப்பியபப் புலவர் நாவரசர் புராணத்தில் அவர்கள் செய்த கொடுமைகளை விரிவாகப் பாடியுள்ளார். ஆனால் சமணர் கழுவேறிய செய்தி பற்றி நம்பி, சேக்கிழார் பாடல்கள் தவிர வேறு எங்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. அப்படியானால் சேக்கிழாருக்கு இப்படிப் பாடுவதற்கு ஆதாரம் ஏதாவது உண்டா என்ற வினாத் தோன்று வது இயல்பே. தமிழகத்தைப் பொறுத்தவரை இச் சமயப் போர்களில் இத்துணைப் பெரிய கொடிய நிகழ்ச்சி நிகழ்ந்தாக எவ்வித பிற ஆதாரமும் இல்லை என்றாலும் கருநாடகத்தில் இத்தகைய நிகழ்ச்சிகள் பல நடந்துள்ளன. சமணர்கள் கை