பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 பெரியபுராணம்- ஓர் ஆய்வு ஓங்கியபொழுது வீர சைவர்களைக் கொல்வதும், வீர சைவர்கள் கை ஓங்கியபொழுது சமணர்களைக் கொல்வதும் சகஜமாக அங்கு நடைபெற்றதைத்தான் அவ்விடத்துக் கல்வெட்டுக்களும் சிற்பங்களும் அறிவிக்கின்றன. எனவே சேக்கிழார் கருநாடகத் தில் சைவ சமணப் போர்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பெரியபுராணத்தில் திருஞான சம்பந்தர் வரலாற்றில் புகுத்திப் பாடிவிட்டார் என்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. சமயப் போர் வேறு; சமயிகள் போர் வேறு இவ்வாறு பாடும் பொழுதுகூட இந்நிகழ்ச்சி சமயப்போரின் விளைவன்று என்பதைச் சேக்கிழார் வலியுறுத்திச் செல்கின்றார். சமயப்போர் வேறு சமயிகள் போர் என்பது வேறு. சமயப்போர் சமயத் தத்துவங்களின் உயர்வு தாழ்வுகளைப்பற்றிச் சொற் போரிடுவதாகும். புத்தபிரான் காலத்திலிருந்தே இது நடைபெற்று வந்துள்ளது. இதில் தவறு ஒன்றும் இல்லை. கற்ற அறிஞர்கள் ஒன்றுகூடித் தத்தம் கொள்கைளை எடுத்துரைப் பதும் எதிராளியினுடைய கொள்கைகளில் உள்ள குறைபாட்டை எடுத்துக்கூறி விவாதிப்பதும், அறிவுக்கு விருந்தாகுமே தவிர இதில் தீமை என்று ஒன்றும் இல்லை. புதிதாகத் தோன்றி வளர்ந்த பெளத்தம், சைனம் இரண்டும் அறிவு வாதத்தின் அடிப்படையில் இந்தச் சொற்போரை நம்பித் தத்தம் சமய அறிஞர்களைக் கொண்டு வாதப்போர் செய்தே தம் செல்வாக்கை வளர்த்துக் கொண்டன. இத்துடன் நில்லாமல் சமணம், பெளத்தம் என்ற இரண்டு சமயங்களும் பொது எதிரிகளாகிய சைவ, வைணவரு டன் போரிட்டதல்லாமல் தமக்குள்ளும் போரிட்டுக் கொண்டன. நாவரசர் சைவம் விட்டுச் சமணஞ் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் தருமசேனர் என்ற பட்டத்தை அவர் பெறுவதற்குக் காரணமாய் அமைந்த நிகழ்ச்சி, அவர் பெளத்தர்களுடன் சொற் போரிட்டு அவர்களை வென்றதனாலேயேயாம். ஆனால் இந் நாட்டில் பன்னெடுங் காலமாக இருந்து வந்த வைதிக சமயத்திலும் ஒரோ வழி இத்தகைய வாதங்கள் நடந்துள்ளன என்பதை ஆதி சங்கர பகவத்பாதருக்கும், மண்டனமிஸ்ரருக்கும் நடைபெற்ற வாதம் பற்றிய கதையின்மூலம் அறிய முடிகிறது. இத் தமிழகத்திலும் அத்தகைய அறிவுவாதப் போர்கள் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் நிகழ்ந் திருக்கலாம். ஆனால் தேவார நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றிய பிறகு எந்த அறிவு வாதப் போர்களும் நடந்ததாகத் தெரியவில்லை.