பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பெரியபுராண மூலங்கள் 439 அதற்கு ஒர் அழகான காரணமும் உண்டு. நாயன்மார்களும், ஆழ்வார்களும் வளர்த்த சைவம், வைணவம் ஆகிய இரண்டும் பக்திமார்க்கத்தில் விளைந்தவையே தவிர அறிவு வழியில் செல்ல வில்லை. வாதம் என்பது அறிவு வழியில் செல்லும் இருவரிடையே நடைபெற வழி உண்டே தவிர்ப் பக்தி வழியில் வாதத்துக்கு இடமே இல்லை. ஆகவேதான் அறிவு வாதப் போர்கள் நடை பெற்றதாக கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆதாரம் எதுவும் காணப்படவில்லை. சங்கரர், இராமாநுஜர், மாத்வர் போன்ற அறிஞர்கள் பழைய நூல்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்குப் புதிய பொருள்களை ஏற்றிப் புதிய சமயப் பகுதி களை நிலைநாட்ட முயன்ற முயற்சிகள் அனைத்தும் அறிவு வாதத்தில் விளைந்தனவேயாகும். எனவே இவர்களைப் பின்பற்றியவர்களிடையே வாதப்போர் ஆங்காங்கே நடைபெற் றிருக்கலாம் என்றாலும் இது பெரிய அளவில் நடைபெறவில்லை. கடவுள் நம்பிக்கை, பக்தி வழி என்ற இரண்டும், சைவ வைணவர் கட்குப் பொதுவாகும். ஆனால் பெளத்தம், சமணம் என்ற இரண்டு சமயங்கட்கும் மேலே கூறிய இரண்டும் இல்லை. எனவே சைவம், வைணவம் என்ற இரண்டும், பெளத்த, சமணங்களுடன் போர் புரிவது இயல்பே என்று நாம் நினைக்கலாம். என்றாலும் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பெளத்தர், சமணர்களுடன் போரிட்டு அவர்களை வளர விடாமல் தடுக்க முயன்ற செயல்களில் சைவர்கள் ஈடுபட்டதுபோல் வைணவர்கள் ஈடுபடவில்லை. இதன் காரணம் என்னவென்று விளங்கவு மில்லை. என்றாலும் இந்தப் போராட்டக்காரர்கள் அவ்வக் காலத்தில் ஆட்சியில் இருந்த அரசர்களைத் தம் வசப்படுத்திக் கொண்டு, தம் சமயத்தில் சேர்த்துக் கொண்டு அந்த அரசருடைய செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்திக்கொண்டே மாற்றுச் சமயத்தாரை ஒடுக்க முயன்றனர் என்று நினைக்க வேண்டியுள்ளது. சிவஞானபோதம், சிவஞான சித்தியார் போன்ற நூல்கள் தோன்றிச் சைவ சமயத்துக்கு அறிவுவாத பூர்வமான ஓர் அடிப்படையைத் தருவதற்கு முன்னர் 7ஆம் நூற் ற்ாண்டு வாக்கில் அறிவுவாதத்தை மேற்கொண்டிருந்த பெளத் தர்களையும், சமணர்களையும் சைவர்கள் அறிவு வாதத்தில் வென்றிருக்க முடியுமா என்பது ஐயத்துக்கு இடமானதேயாகும். எனவே, சமண, பெளத்தவாதிகள் முன்வைத்த அறிவு வாதங் களை ஒரளவு அறிவுவாதங்களாலும் பேரளவு தம் பிற ஆற்ற லாலுமே இவர்கள் எதிர்த்து வெற்றியுங் கொண்டனர் என்று நினைக்கத் தோன்றுகிறது. அறிவு வாதத்தில் தோற்றவர்களைக் கழுமரத்தில் ஏறச் செய்தல் என்பதும் சரியாகாது. ஒரு பேரரசின்