பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 பெரியபுராணம் - ஒர் ஆய்வு முதல் அமைச்சராக இருந்து நீதி, சட்டம் என்பவற்றை நன்கறிந் திருந்த சேக்கிழாருக்கு இதில் உள்ள இக்கட்டான நிலைமை தெரியாமல் போயிராது. எனவே வாதப் போர் என்பதை மாற்றி அவரவர்களுடைய தவவலிமை, இறைபக்தி, அற்புதம் விளைக் கும் ஆற்றல் என்பவற்றில் வாதம் நிகழ்ந்தது என்று பாடிச் செல்கிறார். போட்டி இடும்பொழுது ஒருவருக்கொருவர் ஒட்டம் (பந்தயம்) வைத்துக் கொள்வது இயல்பு. அந்த முறையில் அனல் வாதம் புனல்வாதம் என்ற இரண்டும் செய்ய வேண்டும் என்று பேசிய சமணர், தங்கள் வாய் சோர்ந்து தாமே 'தனிவாதில் அழிந்தோமாகில் வெங்கழு ஏற்றுவான் இவ் வேந்தனே' என்று சொன்னார் இவ்வாறு தாங்களே இப்படி ஒரு பந்தயம் வைத்துக்கொண்டனர் என்று சேக்கிழார் பாடுகிறார். இனி இரண்டு வாதங்களிலும் தோற்றுவிட்ட சமணர் பந்தயப்படிக் கழுவேற வேண்டியவர் களாகின்றனர். ஆனால் இந்த வாதங்களில் ஒருவர் தோற்று விட்டால் எவ்வளவுதான் அவர்களே கட்டிய பந்தயமாயினும் அதற்காக அவர்கள் பலரையும் கழுவேற்ற வேண்டுமா? என்ற வினா பலருடைய மனத்தில் தோன்றத்தானே செய்யும். மேலும் தமிழகத்தில் இத்தகைய நிகழ்ச்சி எதுவும் எப்பொழுதும் நிகழந்த தாகச் சான்று இல்லையே. இந்த இரண்டு ஐயங்களும் சேக்கிழார் மனத்திலும் தோன்றித்தான் இருத்தல் வேண்டும். எனவே கழுவேற்றும் நிலை வந்தவுடன் எதற்காகக் கழுவேற்றம் என்பதைக் கவிஞர் விளக்குகிறார். தலைமை அமைச்சராக இருந்தமையின் சட்ட நுணுக்கம் அவருக்கு நன்றாகத் தெரிந் திருந்தது. அன்றும், இன்றும் கொலைத் தண்டனை பெறும் பல்வேறு குற்றங்களுள் பிறர் வாழும் இடத்தில் தீ வைத்தல் (Arson) ஒரு முக்கியமான குற்றமாகும். இதனைச் செய்தவர் கள் எத்துணைப் பேராயினும் அவர்கள் கொலைத் தண்டனைக்கு உரியவர்களேயாவர். எனவே இத்தண்டனை அவர்கட்கு வழங்கப்பட்டதற்குத் தலையாய காரணம் அவர்கள் திருஞான சம்பந்தர் அடிய்வர் களுடன் தங்கியிருந்த மடத்திற்குத் தீமூட்டிய குற்றத்திற்கே யாகும் என்றும் அடுத்தபடியாக அவர்கள் பந்தயத்தில் தோற்ற தும் இரண்டாவது காரணமாகும் என்றும் பாடுகிறார்.