பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 * - பெரியபுராண ஆராய்ச்சி ஒன்று காட்சி அளிக்கிறது. அதன்மீது அழகும் கட்டமைந்த உடலும் கொண்ட ஒருவர் காண்கிறார். யானையும் குதிரையும் நீரில் நடந்து செல்கின்றன. நீரில் அலைகளும் மீன்களும் தெளிவாகக் காண்கின்றன: இவ்விரு காட்சிகட்கும் மேற்புற மூலைகள் இரண்டிலும் கந்தர்வர் பலர் காண்கின்றனர். அவருள் ஒரு பகுதியார் கரிமீதும் பரிமீதும் வருபவர் மீது மலர் மழை பொழிகின்றனர் மற்றப் பகுதியார் பல்லியங்களைக் களிப்புடன் ஒலிக்கின்றனர். r இவ்வோவியங்களின் காலம் என்ன? தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவன் முதல் இராசராசன். அவன் காலத்திற்றான் அக்கோவிலில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், பரவையார், சண்டீசர் படிமங்கள் எழுந்தருளப் பெற்றன. அவன் மகனான இராசேந்திரன் ஆட்சித் தொடக்கத்தில் அதே கோவிலில் மிலாடுடையார், சிறுத்தொண்டர் வரலாற்றை உணர்த்தும் படிமங்கள் எழுந்தருளப் பெற்றன. இங்குச் சண்டீசர் வரலாறு சிறுத் தொண்டர் வரலாறு இவற்றை உணர்த்தத்தக்க பல படிமங்கள் வரிசையாக வைத்தமை நோக்கத்தக்கது. முதல் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநக்ரமாகக் கொண்ட பிறகு, தஞ்சை பொலி விழந்தது ; பின் வந்த அரசர் அனைவரும் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்தே அரசாண்டனர் . அவர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் பெரிய கோவிலில் ஒன்றிரண்டே காண்கின்றன. புதிய தலைநகரம் ஏற்பட்ட பிறகு அதற்கு அணித்தே சுமார் 25 கல் உள்ள தில்லையே பெருஞ் சிறப்பு அடையத் தொடங்கியது. இத்தகைய பல காரணங்களை நோக்குழி, மேற்கூறிய ஓவியங்கள் பெரிய கோவிலைக் கட்டியவனும், திருமுறைகள் வகுத்தவனுமான இராசராசன் காலத்தன எனக்கோடலே பெரிதும் பொருத்தமாகும். சுந்தரும் சேரமானும் வான்வழியே கயிலை சென்றனர் என்பது சேக்கிழார் கூற்று." இதற்கு மாறாக கடல்வழிச் செலவையே தஞ்சைப் பெரிய கோவில் ஓவியம் தெளிவாகத் தெரிவிக்கிறது. பெரிய புராணத்திற்குப் பிறகு இஃது எழுதப்பட்டிருப்பின் வான் வழியே காட்டப் பெற்றிருக்கும். அங்ங்னம் இன்மையால் இது பெரியபுராணத்திற்கு முற்பட்டதென்பதே பொருத்தமாகும். ஆயின் சுந்தரர் சேரமான் கடற்செலவை நம்பியும் குறித்திலர். அங்ங்னம் இருந்தும், இவ்வளவு தெளிவாகக் கடற் செலவு குறிக்கப்பட்டிருத்தல் சேக்கிழார்க்குமுன் நாட்டில் வழங்கிய சுந்தரர், சேரமான் கடற்செலவைப் பற்றிய வழக்கு வன்மையை உணர்த்துவதாகும் என்று கொள்ளலாம்.