பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் வரலாறுகட்குரிய மூலங்கள் 123 அவர் நூலைச் சேக்கிழார் படிக்கக் கடமைப்பட்டவராவர். இங்ங்னம் அழுத்தமாகப் படித்தமையாற்றான் அதனைத் திருமந்திர மாலை எனப் பாராட்டுவராயினர்." - பதினோராம் திருமுறை இதன்கண் உள்ள பதிகங்கள் பாடியவர் யாவர் என்பதும் அப்பிரிவிலேயே விளக்கப்பட்டது. ஆதலின், இங்கு நமது ஆராய்ச்சிக்கு வேண்டுவன மட்டுமே கூறுவோம். இத்திருமுறையில் நாயன்மார் மூவர் பாடிய நூல்கள் இருக்கின்றன. அவை பின் வருவன: காரைக்கால் அம்மையார் பாடியன (1 திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் 2 திரு இரட்டை மணிமாலை (3) அற்புதத் திருவந்ததாதி என்பன. இவற்றுள் கடைசி நூலே அம்மையார் வரலாற்றை ஓரளவு சேக்கிழார்க்கு அளித்தது. அதன்கண் (1) அம்மையார் இளமையிலேயே சிவபிரானை நினைத்திருந்தமை (2) அவரது சிவப்பற்றின் உறுதி 3 அவரது மனவுறுதி (4) அவரது விருப்பம் (5) அவர் அழகும் அணிகளும் (6) அவர் கண்ட கடவுட் காட்சி முதலியவற்றை விளக்கும் பல பாக்கள் குறிக்கத்தக்கன. ஐயடிகள் பாடிய கூேடித்திர வெண்பா இப்பொழுது கிடைத்துள்ள பாக்கள் 24. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலத்தைக் குறிப்பது; இறக்குந்தறுவாயில் துன்பங்கள் நேருமுன் இன்ன தலத்து இறைவனை நினை’ என்று நெஞ்சிற்கு அறிவுறுத்துவதாக அமைந்தது. இது சேக்கிழார் காலத்தில் நன்னிலையில் முழு நூலாக இருந்திருத்தல் வேண்டும். இஃது அவர்க்கு மிகுந்த பயன்பட்டதாகலாம். - சேரமான் பாடிய நூல்கள் (1) பொன்வண்ணத்து அந்தாதி (2) திருஆரூர் மும்மணிக்கோவை 3. திருக்கயிலாய ஞானஉலா ஆகிய இவை அனைத்தும் சொற்சுவை, பொருட் சுவை மிக்கவை. இவை சேக்கிழார்க்குச் சிறந்த இலக்கியச் செல்வமாக அமைந்தன என்னலாம். - இவற்றுள் நமக்கு வேண்டுவது பொன்வண்ணத்து அந்தாதி. இதன் தொடக்கமும் முடிவும் பொன்வண்ணம் என்றிருத்தல் சேக்கிழார் உள்ளத்தை ஈர்த்து, அசரீரி தந்த 'உலகெலாம் என்ற தொடரைப் பெரிய புராணத்தின் முதலிலும் ஈற்றிலும் அமைக்கச் செய்திருக்கலாம். இதனினும் ஒரு படி மேலே சென்று புராண இடையிலும் உலகெலாம் என்பதை வைத்துப் பாடியிருப்பது. சேரமான் முறையைப் பின்பற்றியது போலவும் ஆயின், ஒரு படி மேலே சென்றது போலவும் எண்ண இடந்தருகிறது.