பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் பற்றிய செய்திகள் 169 வெட்டப்பட்டது. அது திருவாரூர்ச் சிவபிரானே மநுச்சோழன் வரலாற்றைக் கூறுவதுபோல வெட்டப்பட்டுள்ளது. மதுச்சோழன் மகன் பெயர் ப்ரியவ்ருத்தன் அமைச்சன் இங்கனாட்டுப் பாலையூர் உடையான் உபயகுலாமலன் என்பவன், இறுதியிற் சிவபிரான் மது மைந்தனையும் அவனைக் கொல்ல மனம் வராது தற்கொலை செய்து கொண்ட முன் சொன்ன அமைச்சனையும், பசுக்கன்றையும் எழுப்பினதாகக் கூறப்பட்டுள்ளது. மது தன் மகனை அரசனாக்கி, அமைச்சன் மகனான சூரியனை அம் மகனுக்கு அமைச்சனாக்கித் தானும் தன் அமைச்சனும் தவநிலை மேற்கொண்டனராம். மநு தன் அமைச்சற்குப் பரிசாக அளித்த திருவாரூரில் இருந்த மாளிகை, அவன் மரபில் வந்தவனும் விக்கிரம சோழனது அமைச்சனுமான பாலையூர் உடையான் சந்திரசேகரன் ஆதிவிடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வாணராயனுக்கு உரியது. அதனைப் பழையபடி மாளிகையாக எடுத்துக் குடிவைக்க ஏற்பாடு செய்யப் பெற்றது. இந்த விவரங்கள் அனைத்தும் ஆரூர்ச் சிவனார் மாகேசுவரர்க்கும் கோவில் ஆதி சைவர்க்கும் கூறியபடி கல்லில் வெட்டப்பட்டனவாம்." - இக் கல்வெட்டால், விக்கிரம சோழன் காலத்தில் மதுச் சோழன் வரலாறு சிறப்பாகப் பலரும் அறியத்தக்க நிலையில் இருந்ததென்பது அறியலாம். இதிற் காணப்பெறும் பெயர்கள் பிற்காலப் பெயர்களாகும் என்பதும் அறியலாம். சேக்கிழார் பெருமான் (கி.பி. 113-1150). இக் கல்வெட்டைப் படித்திருக்கலாம்: கதையையும் கேட்டிருக்கலாம். ஆயின், ஆராய்ச்சிப் புலவரான அப்பெரியார், கல்வெட்டிற் காணத்தக்க பிற்காலப் பெயர்களை அகற்றித் தமக்கு வேண்டிய குறிப்புகளை மட்டுமே எடுத்துக்கொண்டார் என்பது இக் கல்வெட்டையும் சேக்கிழார் கூறும் கதையையும் படித்தவர் நன்குணரலாம். 3. வேறு சில வரலாற்றுக் குறிப்புகள் இதுகாறும் பேரரசர், சிற்றரசர் சம்பந்தமான வரலாற்றுச் செய்திகளைத் தக்க சான்றுகள் கொண்டே சேக்கிழார் கூறினவராவர் என்பது கூறப்பட்டது. இனி, வாணிகம், சமயம் முதலிய சமுகத் தொடர்பாகச் சேக்கிழார் கூறியுள்ளவை எந்த அளவு அந்நாயன்மார் கால வரலாற்றுக் குறிப்புக்களோடு ஒன்றுபடுகின்றன என்பதைச் சிறிது காண்போம். 1. கடல் வாணிகம் காரைக்கால் அம்மையார் காலத்திற் கடல் வாணிகம் நடந்ததாகவும், அவர் கணவன் கடல் கடந்து வாணிகம் செய்தான் என்றும் சேக்கிழார் கூறியுள்ளார்:" அம்மையாரைப் போலவே அப்பர்க்கு முற்பட்ட அமர்நீதியாரும் பல நாடுகளிலிருந்தும் வந்த வளத்தால் பெருஞ்செல்வராக இருந்தார் என்றும் கூறியுள்ளார்."