பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெரியபுராண ஆராய்ச்சி ‘குன்றைமுனி சேக்கிழார்' எனவும், அண்டவாணர் அடியார்கள் தம்முடன் அருந்தவந்தனில் இருந்தவர்" எனவும் கூறியிருத்தல் கருதற்பாலது. ஆதலின் சேக்கிழார்க்கு மாதேவடிகள் என்ற பெயர் அவர் பெரிய புராணம் பாடிய பிறகு உண்டானதென்று கோடல் பொருத்தமாகும்." இராமதேவன் இப்பெயர் சேக்கிழார் புராண ஆசிரியர் கூறாததாகும். இது சேக்கிழாரது இயற்பெயர் என்னலாம். சிறந்த சைவ மரபிலே பிறந்த சேக்கிழார்க்கு 'இராமதேவன்' என்ற வைணவப் பெயர் அமையுமோ? எனின், அமையும் என்னலாம். 63 நாயன்மாருள் ஒருவராகிய முனையதரையர் 'நரசிங்கர்’ என்ற வைணவப் பெயரையும், ஒன்பதாம் திருமுறையில் இரண்டு பதிகங்கள் பாடியுள்ள சிவனடியார் ஒருவர் ‘புருடோத்தம நம்பி’ என்ற வைணவப் பெயரையும் கொண்டிருந்தனர் என்பதை அறிய, சிறந்த சிவபக்தனான முதற் குலோத்துங்கன் மனைவியருள் ஒருத்தி பெயர் நம்பிராட்டியார் சீராமன்' அருள்மொழி நங்கை என்ற ஏழுலகம் உடையார்" என்பதையும் நோக்க, பெரிய புராண ஆசிரியரும் சிறந்த சிவனடியாரும் ஆகிய சேக்கிழார் 'இராம தேவன்’ என்ற பெயர் பெற்றிருந்ததில் வியப்பில்லை என்க. மேலும் இச்சேக்கிழார் மரபில் வந்த ஒருவன் குன்றத்தூர்ச் சேக்கிழான் வரந்தரு பெருமாள் என்ற திருவூரகப் பெருமாள்' என்றபெயர் கொண்டு மூன்றாம் இராசராசன் காலத்தில் இருந்தான் என்பதும் நோக்கத்தக்கது. 'திருவூரகப் பெருமாள்' என்ற பெயர் குன்றத்தூரில் கோவில் கொண்டுள்ள விஷ்ணுவின் பெயராகும்" என்பது இங்கு அறியத்தக்கது. இத்துடன், குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினருள் சிலர் இன்றும் வைணவராக இருப்பது கவனிக்கத் தக்கது." அருண்மொழித் தேவர் இப் பெயர் சேக்கிழார் இயற்பெயர் என்று கொள்ளத்தக்க முறையில் சேச்கிழார் புராண ஆசிரியர் குறித்துள்ளார். இப்பெயர் சோழர் காலத்திற் பெருவழக்குடையது. முதல் இராசராச சோழனுக்கு இப்பெயர் இருந்தது." அருள்மொழி நங்கை என்று சோழமாதேவியர்க்குப் பெயர் இருந்தது. குடிமக்களும் இப்பெயர் பெற்றிருந்தனர்" என்பது பல கல்வெட்டுக்களைக் கொண்டு அறியலாம். ஆதலின் இப்பெயர் சேக்கிழாரது இயற்பெயராகக் கொள்ளலாம். இன்றேல் பெரிய புராணப் பாடற்சிறப்பு நோக்கி இவரை இங்ங்னம் அறிஞர் அழைப்பாராயினர் எனக் கோடலும் பொருந்தும். உத்தம சோழப் பல்லவராயர் இப்பட்டம் சேக்கிழார்க்கு அரசன் தந்தான் என்று சேக்கிழார் புராண ஆசிரியர் குறித்தனர்.