பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 129

மா-பெருமையைப் பெற்ற. தவம்-தவத்தை.செய்தபுரிந்த, தென் திசை-செந்தமிழ்நாட்டில் விளங்கும் தெற்குத் திசையில் உள்ள ஊர்களில் வாழும் மக்கள்: இடவாகு பெயர். வாழ்ந்திட-நல்வாழ்வைப் பெற்று வாழவும். த்: சந்தி. தீது-ஒரு குற்றமும். இலா-இல்லாத இடைக்குறை. த்: சந்தி. திருத்தொண்டத் தொகை-திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்தை தர்-பாடி வழங்கியருள வும். ப்: சந்தி. போதுவார்-திருநாவலூரில் திருவவதாரம் செய்தருளப்போகிறவராகிய ஆலாலசுந்தரர். அவர்மேல்அந்த இரண்டு பெண்மணிகளின் மேலும். மனம்-தம்மு டைய திருவுள்ளத்தை. போக்கிட-செலுத்த. க்.சந்தி. காதல்-காதலைப் பெற்ற. மாதரும்-விருப்பம் மருவிய அந்த இரண்டு பெண்களும்; ஒருமை பன்மை மயக்கம். காட்சியில். ஆலாலசுந்தரருடைய பார்வையில், கண்ணினார்-அகப்பட் டார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

பின்பு உள்ள 26-ஆம் பாடலின் கருத்து வருமாறு: முன்னால் அந்த நந்தனவனத்தில் அந்த ஆலாலசுந்தரன் வண்டுகள் மொய்க்கும் அரும்புகள் மலர்ந்த அன்று அலர்ந்த மலர்களை அடியேனை ஆளாகக் கொண்ட பரமேசுவர னாகிய கைலாசபதிக்குப் பொருத்தமாக விளங்கும்.பல வகை யாகிய மலர்க்ளைப் பறித்துக்கொண்டு போகக் குளிர்ச்சி. யைப் பெற்ற தாமரை மலரின்மேல் அமர்ந்திருக்கும் அன்னப் பறவையைப் போன்றவர்களாகிய அணிந்திதையும் கமலினி யும் மலர்களைப் பறித்துச் சென்ற பிறகு. பாடல் வருமாறு:

முன்னம் ஆங்கவன் மொய்ம்முகைகரண்மலர் என்னை ஆட்கொண்ட ஈசனுக் கேய்வன பின்மலர்கொய்துச்ெல்லப் பனிமலா அன்னம் அன்ன விருங்கொண் டகன்றபின், இந்தப் பாடல் குளகம். முன்னம்-முன்னால், ஆங்கு அந்த நந்தனவனத்தில் அவன்.அந்த ஆலாலசுந்தரன். - )اساسی م . . . . . . . . . . . . . . . ...