பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராண விளக்கம்

அநாதிமல முத்த பதியாகிய பரமசிவன் தமக்கு ஒரு பிரயோசனமும் குறியாது அநாதிமல பெத்தராகிய ஆன் மார்களுக்கு மலநீக்கமும் சிவ தத்துவ விளக்கமும் சித்திக் கும் பொருட்டுப் பெருங்கருணையினாலே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் பஞ்ச கிருத்தியம் பண்ணுவர். அவற்றுள், படைத்தலாவது சென்மமுடைய பிராணிகளின் சமூகமாயும், போகோப யோகிகளாகிய பரிகரங்களோடு இயைவதாயும் இருக் இன்ற சகத்தை அந்த அந்த நானாவித யோனிகளில் உற். பவிப்பித்தல். காத்தலாவது, தனது இச்சையால் தடுக்கப் பட்ட சர்வலோகத்தையும் தத்தம் விடயத்தில் நியோகிக்க நிறுத்துதல். அழித்தலர்வது, சகத்தைச் சகத்து யோனியில் ஒடுக்கல். மறைத்தலாவது, தத்தம் வாசனைக்குத் தக்க போகத்தின் வழுவாது இருக்கச் செய்தல். அருளலாவது, தீக்ஷா கிருத்தியமாகிய அனுக்கிரகம், இப்பஞ்ச கிருத்திய கருத்தர்வாகிய பதிக்கு உரிய முக்கிய குணங்களான சரு வஞ்ஞதை, திருத்தி, அநாதி போதம், சுலதந்திரதை, அலுப்தசத்தி, அநந்தசத்தி என்னும் ஆறுமாம். இவை தமிழில் முறையே முற்றறிவு, வரம்பில் இன்பம், இயற்கை உண்ர்வு, தன்வயம், குறைவில் ஆற்றல், வரம்பில் ஆற்றல் எனப்படும். எல்லாப் பொருள்களையும் புலப்படக் கானும் அறிவு உள்வழி அல்லது எல்லாத் தொழிலும் இயற்றுதல் கூடாமையின் முற்றறிவும், தமது அனுபவத் தின்பொருட்டுப் பிறிது ஒன்றனை வேண்டிற் பரிபூரணத் தன்மை எடுபட்டுக் கடவுள் தன்மை கெட்டுப்போதலின் வரம்பில் இன்பமும், முற்றறிவுடைய வழியும் அஃது அநாதியன்றி அவாந்தரத்தில் வந்ததேல் காரண பூர்வக மாய் வந்ததெனின் வரம்பின்மைக் குற்றமும், காரணம் இன்றி வந்ததெனின் காரணகாரிய நியமம் இன்மைக் குற்றமும் அடுக்குமாதலின் இயற்கை உணர்வும், பிறர்வயம் உண்டேல் பாசத்தடையும் உளதாகி வேண்டியது