பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - பெரிய புராண விளக்கம்

வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகளைவிட மேம்பாட் டைப் பெற்றதாகி விளங்க அந்தத் திசைகளில் திகழும் ஊர் களில் வாழும் மக்கள் ஆற்றி வந்த புண்ணியச் செயல் எது?’’ என்று வேதியர்கள் கேட்கப் பெருமையைப் பெற்ற தவத் தைப் புரிந்தவனாகிய உடமன்னிய முனிவன். பாடல் வருமாறு:

. *அந்த ணாளரும் ஆங்க்து கேட்டவர்

iiத மானுட்ப்பாற்படு தென்திசை இந்த வானதிசை எட்டினும் மேற்பவந்த புண்ணியம் யாதென மாதவன்'

இந்தப் பாடல் குளகம், அந்தணாளரும்-உபமன்னிய முனிவனோடு இருந்த வேதியர்களும், ஆங்கு-அவ்விடத்தில். அது-உப.மன்னிய முனிவன் திருவாய் மலர்ந்தருளிச் செய்த ஆலாலசுந்தரனுடைய அந்த வரலாற்றை. கேட்டவர்கேட்டவர்களியை அந்த வேதியர்கள் ஒருமை பன்மை மயக்கம். பந்தம்-பாசபந்தத்தைப் பெற்றதாகிய, மானுடப் பால்-மனிதப் பிறவியில். படு-அகப்பட்டுப் பிறந்த தென் திசை-செந்தமிழ் நாட்டின் தெற்குத் திசையில் விளங்கும் ஊர்களில் வாழும் மக்கள்; இடவாகு பெயர். இந்த வான்இந்தச்சிறப்பைக்கொண் ட திசை எட்டினும்-திசைகளாகிய கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்ற எட்டுத் திசைகளில் விளங்கும் ஊர்களில் வாழும் மக்களைவிட:இடவாகு பெயர். திசை: ஒருமை பன்மை மயக்கம். மேம்பட-மேம்பாட்டைப் பெற்றவர்களாக விளங்க. வந்த-அவர்கள் ஆற்றி Q店应· புண்ணியம்-புண்ணியச் செயல். யாது-எது என-என்று வேதியர்கள் கேட்க: இடைக்குறை. மா-பெருமையைப் பெற்ற. தவன்-தவத்தைப் புரிந்தவனாகிய உபமன்னிய முனிவன்.