பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 s - - பெரிய புராண விளக்கம்

வழங்கிய திருவருளை. எய்திய-அடைந்த பொற்பதுசிற்ப்பைப் பெற்று விளங்குவது. கங்கை-கங்கையாறு. வேணி-தம்முடைய தலையில் உள்ள சடாபாரத்தில். மலர-மலர்ச்சியைப் பெற்றுத் திகழவும். க்:சந்தி. கனல்நெருப்பு. மலர்-மலர்ந்து ஒளி வீசவும். செம்-செந்தா மரை மலர்களைப் போன்ற கையாளர்-கைகளைப் பெற்றவராகிய ஐயாறப்பர் கோயில் கொண்டிருக்கும்; கைஒருமை பன்மை மயக்கம். ஐயாறும்-திருவையாறு என்னும் சிவத்தலமும் திகழ்வது-விளங்குவது சோழ மண்டலம் .

திருவையாறு: இது சோழநாட்டில் காவிரியாற்றின் கரையில் விளங்கும் சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் செம்பொற் சோதீசுவரர், பஞ்சநதீசுவரர், ஐயாறப்பர் என்பவை. அம்பிகையின் திருநாமங்கள் அறம் வளர்த்த நாயகி, தர்ம சம்வர்த்தனி என்பவை. இந்தத் தலம் தஞ்சை மாநகரத்திற்கு வடக்கில் ஏழு மைல் தாரத்தில் விளங்குவது. பஞ்சநதீசுவரர் திருநாவுக்கரசு நாயனாருக்குக் கைலாச தரிசனத்தை வழங்கியருளிய தலம் இது. இந்த வரலாற் றைக் காட்டும் விழா ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்து அமாவாசையில் நிகழ்கிறது. அவ்வாறு தரிசனத்தை வழங் கிய மூர்த்தி கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் எழுந்தருளி யுள்ளார். அவருக்குத் தனியே சந்நிதி இருக்கிறது. திருந: வுக்கரசு நாயனாருடைய திருவுருவமும் அங்கே உள்ளது. அந்த நாயனார் எழுந்து வந்ததாகக் கூறப்படும் குளம் திருக்கோயிலுக்கு வடமேற்கில் உள்ளது. சப்தஸ்தானங்கள் என்னும் ஏழு சிவத்தலங்களுக்குள் இது முதலாவதாக விளங்குவது. சுந்தரமூர்த்தி நாயனாருக்காகவும் சேரமான் ப்ெ ள் நாயனாருக்காகவும் பஞ்சநதீசுவரர் காவிரியாற் றின் வ்ெஸ்ளத்தைத் தவிர்ப்பதற்காக அந்த நாயன்மார்கள் இரண்டு பேர்களும் அடியார்களின் ஆட்டத்தோடு காவிரி யாற்றைக் கடந்து சென்று ஐயாறப்பனைத் தரிசித்தார்கள்.