பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*150 - பெரிய புராண விளக்கம்

- திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருப்பதிகங்களைப்

பாடியருளியிருக்கிறார். o . . .

அவற்றுள் மேகராகக் குறிஞ்சிப்பண் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: - . -

"புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி

அறிவழிந்திட் டைம்மேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேலென்

றருள்செய்வான் அமரும் கோயில் வலம்வந்த மட்வார்கள் கடமாட முழவதிர மழையென் றஞ்சிச் சிலமந்தி அலமர்ந்து மரமேறி

முகில்பார்க்கும் திருவை யாறே.

.இந்தத் தலத்தைப் பற்றிக் காந்த்ாரம், பழந்தக்கராகம் என்ற பண்கள் அன்மந்த திருப்பதிகங்களையும், திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் என்பவற்றையும் திருந்ாவுக்கரசு நாயனார் பாடியருளியுள் ளார். அவற்றில் ஒரு திருத்தாண்டகம் வருமாறு: -

'ஒசை ஒலியெலாம் ஆனாய் நீயே

உல்குக் கொருவனாய் கின்றாய் நீயே வாச மலரெலாம் ஆனாய் நீயே - மலையான் மருகனாய் கின்றாய் நீயே பேசப் பெரிதும் இனியாய நீயே

பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே தேச விளக்கெலாம். ஆனாய் நீயே

திருவையா றகலாத செம்பொற் சோதி.

இந்தத் தலத்தைப் பற்றிக் காந்தார பஞ்சமப் பண்ணில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: