பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 " . . பெரிய புராண விளக்கம்

திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தோணிபுர மாகிய சீகாழியோடு எவ்விடங்களிலும் சிவபெரு மானைப் பூசை புரிவதற்குப் பொருத்தமாக விளங்கும் இடங் கள் பல உள்ளன; சொல்லப்போனால் அந்தத் தெற்குத் திசைக்கு ஒப்பாகமாட்டா மற்றத் திசைகள்.' பாடல் வருமாறு: .

தேசம் எல்லாம் விளக்கிய தென்திசை ஈசர் தோணி புரத்துடன் எங்கனும் பூச னைக்குப் பொருந்தும் இடம்பல பேச்சில் அத்திசை ஒவ்வா பிறதிசை.”

தேசம்-பாரதநாடு. எல்லாம்-முழுவதையும். விளக் கிய-விளக்கத்தைப் பெறுமாறு செய்த, தென்திசைதெற்கில் விளங்கும் செந்தமிழ் நாட்டில், இட ஆகுபெயர் ஈசர்-பிரம புரீசர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக் கும். பிரமபுரி-சீகாழி. தோணி புரத்துடன்-தோணிபுர மாகிய சீகாழியோடு. எங்கணும்-எல்லா சிவத்தலங் களிலும், பூசனைக்கு-சிவபெருமானைப் பூசை புரிவதற்கு. பொருந்தும்-பொருத்தமாக விளங்கும்; ஏற்றவையாக விளங்கும். இடம்-தலங்கள்; ஒருமை பன்மை மயக்கம். பல்-பல உள்ளன. பேசில்-சொல்லப் போ னா ல். அத்திசை-அந்தத் தெற்குத் திசைக்கு. ஒவ்வா-ஒப்பாக மாட்டா. பிற-வேறு. திசை-திசைகள், ஒருமை பன்மை மியக்கம். -

அடுத்து வரும் 37-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

என இவ்வாறு பெருமையைப் பெற்றவனாகிய உபமன் னிய முனிவன் வன்றொண்டராகிய சுந்தர மூர்த்தி நாயனார் புரிந்தருளிய செயல்களை அன்று ஒரு நாள் திருவாய் மலர்ந் தருளிய வண்ணமாக சிவனடியவர்களுடைய பழைய கீர்த்தி யைக் சூறும் திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதி கத்தை முதல் நூல்ாகக் கொண்டு அதனுடைய விரிநூலாகிய