பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு . - 153.

வந்தத் திருத்தொண்டர் புராணத்தை அடியேனுடைய பேராவலால் இப்போது பாடுவேன். & பாடல் வருமாறு:

"என்று மாமுனி வன்றொண்டன் செய்கையை

அன்று சொன்ன படியால் அடியவர் .

தொன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி

இன்றென் ஆதர வால்இங்கியம்புகேன்.

இது சேக்கிழார் கூற்று. என்று-என இவ்வாறு மா

பெருமையைப் பெற்ற முனி-உப.மன்னிய முனிவன். வன் றொண்டர்-வன்றொண்டராகிய சுந்தரமூர்த்தி நாயனார். செய்கையை-புரிந்தருளிய செயல்களை ஒருமை பன்மை மயக்கம். அன்று-அன்று ஒரு நாள். சொன்னபடியால்திருவாய்மலர்த்தருளிச் செய்தபடியால், அடியவர்-சிவ னடியார்களுடைய ஒருமை பன்மை மயக்கம். தொன்றுபழைய. சீர்-சீர்த்தியை எடுத்துக் கூறும். த்: சந்தி. திருத்தொண்டத்தொகை-திருத்தொண்டத்தொகை என் னும் திருப்பதிகத்தை முதல் நூலாகக் கொண்டு. விரி-அத. லுடைய விரி நூலாகிய இந்தத் திருத்தொண்டர் புரா ணத்தை வழியின் வகையாகிய நால்வகை யாப்பினுள் தொகைவிரி யாப்பு என ஒன்று போந்த தன்றித் தொகை வகை விரி எனப் போந்த தில்லையாலோ எனின், நடுநின்ற வகை பின் நின்ற விரியை நோக்கின் தொகையாகவும், முன் நின்ற தொகையை நோக்கின் விரியாகவும் அடங்குதலின், இது தொகைவிரி யாப்பு என்றதன்பாற் படும் என்க: எனவே தொகைவிரி என இரண்டாய் வரினும், மரத்தினது பரார்ை யினின்றும் கவடு கோடு கொம்பு வளார்ப் பவலாய் ஒன் றோடு ஒன்று தொடர்பட்டு எழுந்து நிற்றல் போல் தொகை யினின்றும் ஒன்றோடு ஒன்று தொடர்படப் பகுக்கப்பட்டுப் பலவாய் வரினும் தொகைவிரி யாப்பே ஆம் என்க: என்று சிவ ஞான முனிவர் நன்னூலின் உரையில் எழுதியிருப்பது இங்கே பயன்படும். இன்று-இப்போது என்-அடியே